இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஸ் செய்திருக்கிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அந்த விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியையும் இன்று வென்றது.
தீப்தி சர்மா அரிய சாதனை
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கொய்யானா ஜோசப் மற்றும் ஹைலி மேத்யூஸ் என துவக்க வீராங்கனைகள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்னில் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு செமைன் கேம்பல் 46 ரன் மற்றும் ஹென்றி 61 ரன் எடுத்தார்கள். இந்த ஜோடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியாக 162 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி சர்மா ஆறு விக்கெட் கைப்பற்றினார். பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது வீராங்கனை என்ற அரிய சாதனையை படைத்தார்.
ஒயிட் வாஸ் செய்த இந்திய அணி
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 4, பட்டிக்கா ராவல் 18, ஹர்லின் டியோல் 1 ரன் எடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து ஜெமிமா 29, கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் 32 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : கான்ஸ்டாஸ் விவகாரம்.. நான் விராட் கோலி கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. பேசியது தப்பு – ஆஸி முன்னாள் வீரர் பேச்சு
இதற்கு அடுத்து பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 39 ரன்கள் எடுத்து இந்திய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் 28 ஓவரில் வெற்றி பெற வைத்தார். இந்திய பெண்கள் அணி இறுதியாக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முழுமையாக கைப்பற்றி அசத்தியது.






