200-60.. வார்னே ரெக்கார்டை உடைத்த லயன்.. டிராவிட் உலக சாதனைக்கு ஸ்மித் தந்த பிரச்சனை

0
164
Smith

இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்மித் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் இருவரும் மிக பிரம்மாண்டமான இரண்டு சாதனைகள் படைத்திருக்கிறார்கள்.

தற்போது இலங்கைக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை அபாரமான முறையில் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்த இலங்கை அணிக்கு இது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஸ்மித் செய்த சாதனைகள்

இந்தத் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் சதம் அடித்தார். இதன் மூலம் ஆசிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையை படைத்தார். மேலும் 36 டெஸ்ட் சதங்கள் அடித்து தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கும் ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார்.

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குசால் மெண்டிஸ் அடித்த பந்தை கேட்ச் பிடித்ததின் மூலமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத ஆஸ்திரேலியா வீரர் என்கின்ற புதிய சாதனையையும் படைத்து அசத்தியிருக்கிறார். அவருக்கு இந்த கேட்ச் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 வது கேட்ச் ஆக அமைந்தது.

- Advertisement -

நாதன் லயன் சிறப்பு சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக 59 விக்கெட்டுகள் கைப்பற்றி சேன் வார்னே முதல் இடத்தில் இருந்து வந்தார். தற்போது இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக இந்த சாதனையை நாதன் லயன் முறியடித்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக மாறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்:

ராகுல் டிராவிட் (இந்தியா) – 210
ஜோ ரூட் (இங்கிலாந்து) – 207
மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) 205
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 200
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) – 200
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 196
மார்க் வாக் (ஆஸ்திரேலியா) – 181
அலஸ்டர் குக் (இங்கிலாந்து) – 175
ஸ்டீபன் ஃப்ளெமிங் (நியூசிலாந்து) – 171
கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) – 169

இதையும் படிங்க : டி20 லீக்.. உலகில் யாரும் செய்யாத சாதனை செய்த டிரெண்ட் போல்ட்.. மும்பை இந்தியன்ஸ்காக ரெக்கார்ட்

டெஸ்ட்டில் இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்:

நாதன் லியோன் – 60
ஷேன் வார்ன் – 59
மிட்செல் ஸ்டார்க் – 57
கிளென் மெக்ராத் – 37
கிரேக் மெக்டெர்மாட் – 27
மிட்செல் ஜான்சன் – 23
மைக்கேல் காஸ்ப்ரோவிச் – 20
பீட்டர் சிடில் – 19
ஜேசன் கில்லெஸ்பி – 17
பாட் கம்மின்ஸ் – 16
மேத்யூ குஹ்னிமன் – 16
பிரட் லீ-16
மெர்வ் ஹியூஸ் – 16

- Advertisement -