டி20 லீக்.. உலகில் யாரும் செய்யாத சாதனை செய்த டிரெண்ட் போல்ட்.. மும்பை இந்தியன்ஸ்காக ரெக்கார்ட்

0
83
Boult

உலக பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடும் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் யாரும் செய்யாத ஒரு அரிய மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு நியூசிலாந்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து டிரெண்ட் போல்ட் வெளியேறினார். இதன் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்பும் நேரத்தில் டிரெண்ட் போல்ட் விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. இரண்டு தரப்புமே சம்மதிக்கும் பொழுது விளையாடினால் போதுமானதாக மாறியது. இதனால் அவர் உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாட ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் சாம்பியன்

கடந்த மூன்று வருடங்களாக சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் அந்த நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் இரண்டு தொடர்களிலும் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்று இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மூன்றாவது தொடரிலும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்து ஆச்சரியப்படுத்தியது. இன்னொரு அணியாக மும்பை இந்தியன்ஸ்அணி இறுதிப் போட்டிக்கு வந்தது.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணி 18. 4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதன் மூலம் முதல் முறையாக சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்காக விளையாடிய டிரெண்ட் போல்ட் இறுதிப் போட்டியில் நான்கு ஓவர்களுக்கு 9 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

டிரெண்ட் போல்ட் அரிய சாதனை

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக உலகெங்கும் நடக்கும் 4 டி20 லீக்குகளில் 4 சாம்பியன் பட்டங்களை டிரெண்ட் போல்ட் வென்று அசத்தியிருக்கிறார். ஒரே அணிக்காக உலகின் வெவ்வேறு நான்கு டி20 லீக்குகளில் பட்டம் வென்ற முதல் வீரர் என்கின்ற அரிய சாதனையையும் கிரிக்கெட் உலகில் நிகழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : திடீரென திட்டத்தை மாற்றிய ரோகித் கம்பீர்.. ஸ்ரேயாஸ் கொடுத்த புது சிக்கல்.. வருணுக்கு வாய்ப்பு

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன்முதலில் ரோகித் சர்மா தலைமையில் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2023 ஆம் ஆண்டு அமெரிக்க டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கும், சவுதி அரேபியா ஐஎல்டிடி 20 லீக்கில் 2024ஆம் ஆண்டும், தற்பொழுது சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் இந்த ஆண்டும் என மொத்தம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு சாம்பியன் பட்டத்தை நான்கு வெவ்வேறு டி20 லீக்குகளில் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -