நடராஜன் சொந்த கிரிக்கெட் மைதான திறப்பு விழா ; திரண்ட வீரர்கள் ; சாதித்து காட்டிய நம்ம நட்டு!

0
9909
Natarajan

பொருளாதார படிநிலையில் கடைநிலையில் இருக்கும், முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு இன்று தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் என்கின்ற நட்டு முன்னுதாரணமாக இருக்கிறார்!

சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி என்கின்ற கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நடராஜன், தன்னுடைய கடின உழைப்பால் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

ஆரம்பக் கட்டங்களில் லீக் போட்டிகளில் விளையாடி பின்பு டிஎன்பிஎல் லீக் தொடரில் பங்கேற்று அசத்தி, அங்கிருந்து ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டு, அங்கும் அவரது பந்துவீச்சு முத்திரை பதிக்க ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்காக வெள்ளைப்பந்து மற்றும் சிவப்புப்பந்து இரண்டிலும் அறிமுகமாகி உயர்ந்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் இரண்டாவது முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்ற கஃபா ஆட்டத்தில் நடராஜன் தனது முத்திரையை பதித்திருந்தார். அவரது இந்த வளர்ச்சி முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கான முன்னுதாரணமாக இருக்கிறது.

தன்னைப் போன்று கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் எளிய பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்ட இளைஞர்களுக்காக இன்று நடராஜன் சொந்தமாக ஒரு மைதானத்தை உருவாக்கி திறப்பு விழா நடத்தி சாதித்துக் காட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்த விழாவிற்கு இந்திய அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களும், தமிழக அணிக்காக விளையாடும் முன்னணி வீரர்களும் திரளாக வந்து பங்கேற்று நடராஜனை பாராட்டி இருக்கிறார்கள்.

விஜய் சங்கர் பேசும் பொழுது “எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் வந்து இந்திய அணியில் இடம் பெறலாம் என்பதற்கு நடராஜன் உதாரணம். கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்கலாம்!” என்று அவர் காட்டியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது
“இவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாடாத எனக்கு தோன்றாத விஷயம் நடராஜனுக்கு உருவாகி இருக்கிறது. தான் பெற்றதை அவர் திருப்பி சமுதாயத்திற்கு கொடுக்க நினைக்கிறார். அவரது உயர்ந்த லட்சியத்திற்கும் மனதிற்குமான சாட்சிதான் இந்த மைதானம்!” என்று கூறியிருக்கிறார்.