இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் போட்டி முன்கூட்டியே வெளிச்சமின்மையால் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த முடிவு மோசமானது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசைன் கூறியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்படுகின்ற நிலையில் கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருக்கின்றன. அதே சமயத்தில் தோள்பட்டையில் காயமடைந்த கிறிஸ் வோக்ஸ் விளையாட வருவாரா? என்பது இன்னும் தெரியவில்லை. இதனால் போட்டி உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது.
பணம் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்
இது குறித்து நாசர் உசைன் பேசும்பொழுது ” மிக முக்கியமாக பணம் கொடுத்து பார்க்க வந்த பார்வையாளர்களுக்கும், மேலும் ரசிகர்களுக்கும் திங்கள் கிழமை வேலை நாளாகும். மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தொடர் வரலாற்று சிறப்புமிக்க ஓவல் மைதானத்தில் விடுமுறை நாளான ஞாயிறு நேற்று நடந்து முடிவது மிகச் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு இறுதிப் போட்டி போல அமைந்திருக்கும்”
“ஒன்று இங்கிலாந்து 35 ரன்கள் எடுத்திருக்கலாம். அல்லது இந்திய அணி மிகச் சிறப்பான பந்துவீச்சின் மூலம் கிறிஸ் வோக்சை செய்ய கொண்டு வந்திருக்கலாம். ஏனென்றால் விதிகளுக்கு உட்பட்டு நாம் பார்க்கும் பொழுது மேலும் விளையாடுவதற்கு 42 நிமிடங்கள் இருந்தது”
அவமானமாக இருக்கிறது
“வெளிச்சம் இல்லை என்று போட்டி முடித்துக் கொண்ட பின்பு மீண்டும் மழை நின்று வெயில் வந்தது. அந்த நேரத்தில் 11:12 மணி வரையில் போட்டியை நடத்த வாய்ப்பு இருந்தது. ஆனால் நடுவர்கள் அதற்கு மேல் போட்டியை துவங்க வரவில்லை. இது மிகவும் ஒரு தவறான முடிவாக அமைந்திருக்கிறது”
இதையும் படிங்க : அடப்பாவமே.. சிராஜ் செய்த மிகப்பெரிய தவறு.. ஹாரி புரூக்கிற்கு எங்கேயோ மச்சம் இருக்கு.. சாரி சொன்ன சிராஜ்
“இதில் இந்தியா எங்கள் பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்து விட்டார்கள் என்று கேட்டால் மட்டுமே போட்டியை அடுத்த நாளுக்கு தள்ளி வைக்க முடியும். அதாவது கடைசி இரண்டு விக்கெட்டுகள் இருக்கும் பொழுது போட்டியை முடிப்பதற்காக இன்னும் அரை மணி நேரம் கூடுதலாக கொடுக்க முடியும். இதனால் தான் உங்களுக்கு கொஞ்சமாவது பொது அறிவு இருக்குமா? என்று நான் யோசிக்கிறேன். இது மிகவும் அவமானகரமானது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






