இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய சிராஜ் செய்த ஒரு தவறு மிகப்பெரிய பின்னடைவை அணிக்கு ஏற்படுத்திருக்கின்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் எந்த அணியும் வெற்றிகரமாக 265 ரன்கள் என்ற இலக்கை தாண்டியது கிடையாது.
இதனால் கடைசி இன்னிங்ஸில் 374 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இங்கிலாந்துக்கு கடும் சவாலாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆடுகளம் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி வருவதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டத்தில் இங்கிலாந்து அணியின் டாப் வரிசை வீரர்களின் ஒவ்வொரு விக்கெட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சிராஜ் செய்த தவறு:
அவர்கள் கொடுக்கும் கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்யாமல் பிடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்கள் உள்ளான சாக் கிராலி, பென் டக்கட், ஆலி போப் ஆகியோரின் விக்கெட்டை இந்தியா கைப்பற்றி விட்டது.
தற்போது ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் தான் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த ஜோடியை எவ்வளவு சீக்கிரம் பிரிக்கிறதோ அவ்வளவு இந்தியாவுக்கு நல்லது. அந்த வகையில் பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரு ஷார்ட் பாலை ஹாரி புரூக் அபாரமாக அடித்தார். ஆனால் அந்த பந்து பௌண்டரி லைனில் நின்று கொண்டிருந்த சிராஜிடம் சென்றது.
மன்னிப்பு கேட்ட சிராஜ்:
இந்த பந்தை சிராஜ் கேட்ச் பிடித்துவிட்டு நேராக சிக்சர் லைனில் கால் வைத்து நின்றுவிட்டார். இதனால் இது சிக்ஸராக மாறியது. அந்த கேட்ச் மட்டும் சிராஜ் பிடித்திருந்தால், இந்நேரம் இங்கிலாந்து அணியில் அபாயகரமான வீரராக கருதப்படும் புரூக் ஆட்டம் இழந்திருப்பார்.
இதையும் பாருங்க: என்னால் மேலும் 5 ஆண்டுகள் விளையாட முடியும்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க.. ஆனால்? ஓய்வு, சிஎஸ்கே குறித்து தோனி பேச்சு
இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறி இருக்கின்றது. இந்த நிலையில் தான் தவறு செய்து விட்டதை உணர்ந்த சிராஜ் பவுலர் பிரசித் கிருஷ்ணாவிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது இங்கிலாந்து மதிய உணவு நேர இடைவெளியின் போது மூன்று விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 210 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியாவின் வெற்றிக்கு ஆறு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. கிறிஸ் வொக்ஸ் பேட்டிங் செய்ய வராததால் ஒன்பது விக்கெட் எடுத்தாலே வெற்றிக்கு போதுமானது.






