கோலி கிடையாது.. டி20 உ.கோ-ல் இவர்தான் இந்தியாவுக்கு அதிக ரன் எடுப்பார் – அம்பதி ராயுடு கணிப்பு

0
338
Ambati

தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு போலவே முன்னாள் வீரர்களுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த நிலையில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக யார் அதிக ரன்கள் எடுப்பார்கள்? என அம்பதி ராயுடு கணித்திருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் பொதுவாக எல்லா அணிகளுக்குமே கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும். தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கு மட்டுமே அங்குள்ள சூழ்நிலைகள் பழக்கப்பட்ட ஒன்று. மற்றபடி நிறைய அணிகளுக்கு மொத்தமாகவே பழக்கம் கிடையாது.

- Advertisement -

இந்தியா போன்ற பெரிய அணிகளிலும் கூட ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே இந்த இரு நாடுகளிலும்விளையாடிய அனுபவம் இருக்கிறது. அமெரிக்கா புதிய நாடு என்பதால் அங்கு விளையாடிய அனுபவம் யாருக்கும் பெரிதாக கிடையாது. எனவே பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

இந்த நிலையில் உலகின் பல முன்னாள் வீரர்களும் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிக விக்கெட் கைப்பற்றுவார்? எந்த வீரர் அதிகரங்கள் எடுப்பார்கள்? என்கின்ற தங்களது கணிப்புகளை அதிரடியாக வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த வகையில் அம்பதி ராயுடு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக யார் அதிக ரன்கள் எடுப்பார்கள் என்கின்ற கேள்விக்கு, அவர் இந்திய அணியின் கேப்டன் மற்றும் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். முன்னாள் வீரர்களில் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்த ஒரே வீரராக அம்பதி ராயுடு மட்டுமே இருக்க வாய்ப்புண்டு.

- Advertisement -

இதையும் படிங்க : பெரிய வீரர்கள் இருந்தாலும் உலக கோப்பையை ஜெயிக்க முடியாது.. டிராவிட் இத செய்யணும் – பிரையன் லாரா கருத்து

அம்பதி ராயுடு விராட் கோலியை புறக்கணித்து ரோஹித் சர்மாவை தேர்வு செய்திருப்பது தற்பொழுது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்படக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விராட் கோலி குறிவைத்து அம்பதி ராயுடு தொடர் விமர்சனங்களை செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாகவே அவர் விராட் கோலியை தேர்வு செய்யவில்லை என ரசிகர்கள் கருதுகிறார்கள்!