இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது ஜெயிச்சிட்டாங்க.. ஆனா தகுதியானவங்க – திடீர் பல்டி போட்ட நாசர் ஹுசைன்

0
674
Hussain

நடப்புக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் திடீரென பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்த போட்டிக்கு முன்பாக பேசியிருந்த நாசர் ஹுசைன் 2022 ஆம் ஆண்டு அரையிறுதி போட்டி போலவே இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தும் என பேசி இருந்தார். இந்த நிலையில் அப்படியே மாற்றி தற்பொழுது இந்திய அணியைப் பாராட்டி பேசி இருக்கிறார். அத்தோடு இந்திய அணிக்கு நிலைமைகள் சாதகமாக இருந்தது என்று உள்குத்தாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டி நடந்த கயானா மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. இந்திய அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தது போலவே, இங்கிலாந்து அணிகளும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவரைதான் பயன்படுத்தினார்கள். இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று பேரையும் பயன்படுத்தினார். இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடவில்லை. ஆனால் இதை இங்கிலாந்து முன்னாள் வீரர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து நாசர் ஹுசைன் பேசும்பொழுது “வியாழக்கிழமை நடந்த எல்லாமே இந்திய அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்துச் சென்றது. அந்த விக்கெட் மற்றும் இடம் என்று எல்லாமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது.நீங்கள் இன்னும் கொஞ்சம் விஷயங்களை விரிவாக பார்த்தால், அவர்கள் இங்கிலாந்து அணியை மட்டும் இல்லாமல், பவுன்ஸ் கொண்ட ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி விட்டு அங்கிருந்து திரும்பி தங்களுக்கு வசதியான மெதுவான ஆடுகளத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறார்கள். அவர்கள் விளையாடிய விதத்திற்கு நியாயமான ஒரு ஆட்டமாக இருந்தது. தோல்வியடையாத இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன.

இதையும் படிங்க : நான் ஜின்க்ஸ் பண்ணல.. எனக்கு என்னமோ விராட் கோலி அத பண்ண போறாருனு தோணுது – டிராவிட் பேச்சு

ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மழை வந்தால் டக்வோர்த் லிவிங் விதியை அவர் யோசித்துக் கொண்டிருந்திருப்பார். மேலும் மழை பெய்த காரணத்தினால் ஆடுகளத்தில் உள்ளே ஈரப்பதம் இருக்கும், எனவே தங்கள் பந்துவீச்சாளர்களால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று பார்த்திருப்பார். ஆனால் அப்படி நடக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -