நேற்று இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் இழந்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஒரு பக்கத்தில் மழை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.
விராட் கோலி இந்த தொடர்பு முழுக்க சேர்த்து மொத்தம் ஏழு போட்டிகளில் 75 பந்துகளை சந்தித்து 75 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆனாலும் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து இந்திய அணிக்கு நல்ல ஸ்கோர் வர உதவி செய்தார். இதைத்தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்குமே இது கடைசி சர்வதேச டி20 போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலியிடம் இருந்து மட்டும் ரன்கள் வராதது பலரையும் வருத்தப்பட வைத்திருக்கிறது. அவர் இதுவரை விளையாடிய நான்கு டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டியிலும் அரைசதங்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “ரோகித் சர்மாவை ஒரு கேப்டனாகவும் வீரராகவும் நான் உயர்வாக மதிப்படுகிறேன். அவர் அணியை வழிநடத்தும் விதம் மற்றும் இந்த பக்கத்தை எடுத்துச் செல்லும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் கேப்டனாகவும் வீரராகவும் தனித்துவம் மிக்கவர்.
இதையும் படிங்க : விராட் கோலி சீக்கிரம் அவுட் ஆக காரணமே இவர்தான்.. ஒரு விஷயத்தை கோலி புரிஞ்சுக்கணும்- ரவி சாஸ்திரி பேட்டி
விராட் கோலி அணிக்கு முக்கியமானவராக இருக்கிறார். அவர் முதல் பந்தில் இருந்து நல்ல இன்டெண்ட்டை காட்டுகிறார். நான் அவருடைய இன்டெண்ட்டை விரும்புகிறேன். மேலும் நான் அவரது மனநிலையையும் விரும்புகிறேன். நான் சொல்வது ஜின்க்ஸ் இல்லை. இறுதிப் போட்டியில் விராட் கோலியிடமிருந்து பெரிய ரன்கள் வரப்போகிறது என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.