இந்திய கிரிக்கெட்

கிரிக்கெட் முன்பு மாதிரி இல்லை.. அரசியலை வீரர்களே செய்கிறார்கள்.. இது மோசமானது – நாசர் ஹுசைன் வருத்தம்

தற்போது விளையாட்டில் அரசாங்கங்கள் மட்டும் இல்லாமல் வீரர்களை அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசைன் வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அடுத்த துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. தற்போது இது உலக கிரிக்கெட் மட்டத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் கவலை தருகிறது

இதுகுறித்து நாசர் ஹுசைன் பேசும்பொழுது ” இது உண்மையிலேயே மனதை தளர வைக்கும் விஷயமாக இருக்கிறது. கிரிக்கெட்டும் அரசியலும் எப்பொழுதும் இணைப்புடன் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் தற்போது இந்த இணைப்பு மிகவும் வெளிப்படையாகவும் அதிகமாகவும் காணப்படுகிறது”

“ஒரு காலத்தில் இது அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது சாதாரணமாக மாறிவிட்டது. மேலும் இந்த அரசியலில் தற்போது அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் வீரர்களும் நேரடியாக ஈடுபடுகிறார்கள். உதாரணமாக வீரர்கள் கைகுலுக்க மறுப்பது மற்றும் கோப்பையை உயர்த்த மறுப்பது போன்றவைகளை நேரில் பார்த்தேன்”

- Advertisement -

கிரிக்கெட் இப்பொழுது மாறிவிட்டது

“முன்பு கிரிக்கெட் பிளவு பட்ட மக்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய இணைப்பு பாலமாக இருந்தது. ஆனால் இப்பொழுது கிரிக்கெட் அந்த பிளவுகளை மேலும் பெரியதானதாக மாற்றக் கூடியதாக மாறியிருக்கிறது. இது கவலை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது”

இதையும் படிங்க : ஒரு ஃபீல்டர் இருந்தாலும்… நான் அங்க அடிப்பேன்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – இஷான் கிஷான் பேச்சு

“இந்த விஷயம் முதல் முதலில் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் விளையாட கூடாது என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. பங்களாதேஷ் தங்களுடைய வீரருக்காக களம் இறங்கியது. இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தொடர்ந்து பங்களாதேஷை ஆதரிக்க பாகிஸ்தான் வந்தது. இது அரசியல்தான்.
ஆனால் பிரச்சனை எங்கிருந்துதான் ஆரம்பித்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts