ஒரு ஃபீல்டர் இருந்தாலும்… நான் அங்க அடிப்பேன்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – இஷான் கிஷான் பேச்சு

0
6
Ishan

இன்று தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷான் 20 பந்துகளில் அதிரடியாக 53 ரன்கள் குவித்தார். மேலும் இன்றைய போட்டிக்கு பிறகு அவர் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறை குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் இஷான் கிஷான் ஆட்டம் இழக்காமல் அடுத்து விளையாட கூடியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வேகப்பந்து வீச்சில் அவர் சிக்ஸர்கள் விலாசிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

பின்தங்கிய அபிஷேக் ஷர்மா

இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மா இஷான் கிஷான் அதிரடிக்கு முன்னாள் பின்தங்கி விட்டார். இஷான் கிஷான் 20 பந்துகளில் அதிரடியாக 53 ரன்கள் எடுக்க, அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது இஷான் கிஷான் அதிரடியாக விளையாடுவது இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.

அபிஷேக் ஷர்மா துவக்கத்திலேயே ஆட்டம் இழந்தால் இந்திய அணி பெரிய ஸ்கோருக்கு செல்வதில் தடுமாற்றம் இருந்தது. தற்பொழுது இஷான் கிஷான் அபிஷேக் ஷர்மா அளவுக்கு அதிரடியாக விளையாடுகின்ற காரணத்தினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

என் அணுகுமுறை இதுதான்

இது குறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது “மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்வது எனக்கு சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் உலகக் கோப்பை இருக்கும்பொழுது எனக்கு எந்த இடம் கொடுத்தாலும் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் தான் கவனம் இருக்கிறது. நான் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறேன். பந்தை பார்க்கிறேன் அதற்கு ஏற்ற ஷாட் விளையாடுகிறேன். இது எனக்கு நல்ல பலனை கொடுத்து வருகிறது”

இதையும் படிங்க : 240 ரன்.. பயிற்சி போட்டியில் தெறிக்க விட்ட இஷான் கிஷான்.. சஞ்சுவுக்கு கல்தா.. திலக் கலக்கல் கம்பேக்.. தென் ஆப்பிரிக்கா தோல்வி

“சில நாட்களில் நீங்கள் உங்களை நன்றாக உணர்வீர்கள். எனக்கு அப்படியான ஒரு நாளாக இருந்தது. மேலும் இன்று பேட்டிங் செய்வதற்கு ஆடுகளமும் நல்ல நிலையில் இருந்தது. மிக முக்கியமாக உலகக் கோப்பை மிக அருகில் இருக்கும் பொழுது ஒரு ஃபீல்டர் வெளியில் இருந்தால் கூட அந்த இடத்தில் தைரியமாக பந்தை நம்பிக்கையோடு விளையாட வேண்டும். நான் இதை மாற்றிக் கொள்ள மாட்டேன் இப்படித்தான் விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -