தற்போது இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுலின் பேட்டிங் சிறப்பான முறையில் மாறி இருப்பதற்கான காரணத்தை தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி கூறியிருக்கிறார்.
கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் தற்பொழுது இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரராக மீண்டும் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார சதம் அடித்திருக்கிறார்.
இருவரும் ஒரே மாதிரி
இது குறித்து பேசி இருக்கும் ஹேமங் பதானி கூறும் பொழுது “நான் கேஎல்.ராகுலை முரளி விஜய் உடன் ஒப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் அவரைப் போலவே இவரும் பந்தை வெளியில் விளையாடாமல் கீப்பருக்கு சிறந்த முறையில் விட்டு விடுகிறார்கள். பொதுவாக ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்துக்கு பேட்டை வீசுவது கிடையாது. இவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது முரளி விஜய் பேட்டிங் செய்கிறாரா என்று எனக்கு குழப்பமாக இருந்தது”
“இதில் இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கிறது. இந்திய வீரர்கள் அனைவருமே ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் பந்தை லெக் சைடு விளையாட பார்ப்பார்கள். ஆனால் கேஎல்.ராகுல் அப்படி எதையும் செய்யவில்லை. அவர் டெஸ்ட்டுக்கு எப்படி விளையாட வேண்டுமா அப்படி உடனே மாறி விளையாடினார்”
முதல் இரண்டு மணி நேரத்தில் நடந்தது
“கேஎல்.ராகுல் முதல் இரண்டு மணி நேரத்தில் பேட்டிங் செய்யும்பொழுது ஒரு ஹரிஸாண்டில் ஷாட் கூட அடிக்கவில்லை. கட் மற்றும் புல் ஷாட் கூட ஆடவில்லை. அவர் பந்தை நேராக விளையாட மட்டுமே செய்தார். பந்து புதியதாக இருக்கிறது என்பதை தெரிந்து அவர் அதை பழையதாக மாற்றுவதற்கான வேலையில் ஈடுபட்டார். அதை செய்த பிறகு அவருக்கு சதம் எளிதான விஷயமாக மாறிவிட்டது”
இதையும் படிங்க : கேஎல் ராகுல் பேட்டிங்கில் மாஸாக திரும்பி வர.. பின்னணியில் இருப்பது இவர்தான் – தினேஷ் கார்த்திக் தகவல்
“உண்மையில் அவர் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழந்ததற்கு மிகவும் வருத்தப்பட்டு இருப்பார். எனக்கு அவரைப் பற்றி மிக நன்றாகவே தெரியும். ஏனென்றால் கடினமான சூழ்நிலையில் 40 ரன்கள் எடுத்த பிறகு, ஒரு தொடக்க ஆட்டக்காரராக நீங்கள் அதை பெரிய ரன்னாக மாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நீங்கள் ஆறாவது ஏழாவது இடத்தில் வந்தால் இந்த 40 ரன் சரியானது. ஆனால் தொடக்க இடத்திற்கு கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் என்று வருத்தப்பட்டு இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.






