நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 ட்ரை-சீரிஸ் போட்டியின் முதல் மேட்ச்சில், நமீபியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி வெற்றி பெற்றுள்ளது.
விண்டோயக் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி, ஜான் ஃப்ரிலிங்க் அடித்த 60 ரன்கள் மற்றும் லூரன் ஸ்டீன்காம்பு அடித்த 41 ரன்களின் உதவியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பிரினெலன் சுப்ராயன் 3 விக்கெட்டுகளையும், பிஜார்ன் ஃபோர்ட்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கம் சாதகமாக அமையவில்லை. இருப்பினும் டெவால்ட் ப்ரீவிஸ் 50 பால்களில் 75 ரன்கள் விளாசி ஃப்ரண்ட் புட்-டில் ஆடிப் போராடினார். ஆனால் நமீபியா பவுலர்களான ரூபென் ட்ரம்ப்புள்மேன் மற்றும் ஜே. ஜே. ஸ்மிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை 145/9 ரன்களுக்குள் சுருட்டினர்.
இதன் மூலம் நமீபியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வரும் நமீபியாவின் இந்த ஷாக்கிங் வின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி குறித்து நமீபியா கேப்டன் கெரார்ட் ஏரஸ்முஸ் பேசும்போது “நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தகுதியானவர்கள் என்பதையும், எங்கள் முந்தைய வெற்றிகள் தற்செயலாக கிடைத்தது அல்ல என்பதையும் இது காட்டுகிறது. உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமின்றி, சொந்த மண்ணிலும் எங்களால் டாப் அணிகளுக்கு சவால் அளித்து தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்” என்று கூறி இருக்கிறார்.






