இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய பாசிடிவ் அம்சமாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தேர்வு செய்துள்ளார். தேவதத் படிக்கல் மற்றும் மானவ் சுதார் ஆகியோரை விட பிரசித் கிருஷ்ணா ஆசிய பிட்ச்களில் சிறப்பாக செயல்பட்டதாக அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் பும்ரா இல்லாத நிலையில், இளம் வீரர்கள் பலர் தங்களது திறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆசிய பிட்ச்களில் பாஸ்ட் பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவது சவாலான ஒன்றாகும். இதில் இளம் பவுலர்களின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆர். அஸ்வின் பேசும்போது “நான் இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து யோசித்தால், இந்த தொடரில் எனக்கு மிகப்பெரிய பாசிடிவ் பிரசித் கிருஷ்ணா தான். அதற்கு அடுத்தபடியாக முதல் டெஸ்ட் போட்டியில் மானவ் சுதாரின் பெர்ஃபார்மன்ஸ் இரண்டாவது பெரிய பாசிடிவ். பல வழிகளில் துருவ் ஜூரெலையும் சொல்லலாம், ஆனால் பிரசித் கிருஷ்ணா வந்த விதம் மிகவும் சிறப்பு. சப்டிராக்ட் கண்டிஷனில் ஒரு பவுலருக்கு இது சவாலான விஷயம், அதை அவர் சிறப்பாக செய்தார்”
“மேலும் தேவதத் படிக்கல் நியூசிலாந்து தொடரில் நம்பர் 3 பேட்டராக களமிறங்க வேண்டும். ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் ரன்கள் அடித்து தனது வாய்ப்புக்காக காத்திருந்த அவர், இப்போது நம்பர் 3 இடத்திற்கான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.






