கம்பீர் அநியாயமா அந்த வீரர் தன்னம்பிக்கையை உடைச்சுட்டார்.. பூமிக்கு அடியில தோண்டுனாலும் கிடைக்காது – அஸ்வின் வருத்தம்

0
1

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இலங்கை தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படாதது மற்றும் அதனால் அவரது தன்னம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

​இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வால்முனை பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் இந்திய அணி தடுமாறிய நிலையில், குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

​இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “பலர் குல்தீப் யாதவுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள், ஆனால் சிலர் அவர் கடந்த போட்டியில் என்ன செய்தார் என்று எதிர்த்துப் பேசுகிறார்கள். இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஒரு பிளேயர் கோணத்தில் பார்த்தால், இந்த நேரத்தில் அவரது கான்ஃபிடன்ஸ் மிகக் குறைந்த அளவில் இருக்கும். நீங்கள் பூமிக்கு அடியில் சென்று தேடினாலும் அதைக்கூட கண்டுபிடிக்க முடியாது. 60 முதல் 80 ஓவர்கள் வரை ஜடேஜா அதிகளவில் போல் செய்கிறார். ஏன் அவர் அங்கு அவ்வளவு போல் செய்கிறார்? ரன்கள் அடிப்பது கடினம் என்பதால் தான், ஆனால் அதே சமயம் ஒரு ஸ்பின்னருக்கு அங்கு பந்துவீசுவதும் கடினம் தான்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து குல்தீப்பின் பந்துவீச்சு குறித்து அஸ்வின் பேசும்போது “ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பெல்கூட நீட்டிக்கப்படவில்லை, அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தினுஷாவுடன் டேல் எண்டர்கள் பேட்டிங் செய்தபோது, குல்தீப் தனது கூக்ளி மற்றும் லெக் பிரேக் பந்துகளுடன் அங்கு இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு எக்ஸ் ஃபேக்டர் இருந்திருக்கும். அவர் என்ன தவறு செய்தார்? அவரை ஏன் செலக்ட் செய்யவில்லை? அவருக்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து பேசிய அஸ்வின் “அவர்கள் அவரை அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட வைப்பார்கள். ஆனால் இரண்டு தவறுகள் ஒரு சரியை உருவாக்க முடியாது. முதல் டெஸ்ட் போட்டிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டீர்கள், எனவே அவருக்கு ஆதரவளித்து வாய்ப்பு அளித்திருக்கலாம். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -