இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பின் பதவிக்காலம் முடிந்து ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். மேலும் குடும்பத்துடன் இருந்து மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை கவனிப்பதாக கூறியிருந்தார். தற்போது அவரது மகன் உள்நாட்டில் பிரபலமான டி20 லீக்கில் முக்கிய அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் வருடம் தோறும் டிஎன்பிஎல் தொடர் நடைபெறுவது போல கர்நாடகாவில் மகாராஜா கேஎஸ்சிஏ டி20 லீக் நடைபெறுகிறது. இந்த தொடரில் தேவ்தத் படிக்கல், மயங்க் அகர்வால், பிரசித் கிருஷ்ணா, கிருஷ்ணப்பா கௌதம், கருண் நாயர் போன்ற பிரபல வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் கடந்த வருடம் மைசூர் வாரியர்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்திருந்தது. இந்த நிலையில் ராகுல் டிராவிட்டின் 18 வயதான மகன் சமித் டிராவிட் மைசூர் வாரியர்ஸ் அணியால் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார். மிகக்குறைந்த அளவு பணமாக இருந்தாலும் கூட, தன் தந்தையைப் போலவே பணத்தை விட முக்கியமாக விளையாட்டை நினைக்கிறார். சமீபத்தில் ராகுல் டிராவிட் தனக்கு வந்த பெரிய பரிசு தொகையை சக பயிற்சியாளர்கள் அளவுக்கு குறைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் வருகிறார். 2023-24 ஆம் ஆண்டு கூச் பெகார் டிராபியை வென்ற கர்நாடக அண்டர் 19 அணியில் இடம்பெற்று விளையாடியிருந்தார். மேலும் குறிப்பிடத்தக்க ரன்கள் அடித்ததுடன் விக்கெட்டும் பந்துவீச்சில் கைப்பற்றி இருந்தார். இந்த ஆண்டு கர்நாடக கிரிக்கெட் சங்க அணிக்கு எதிராக வந்து விளையாடிய இங்கிலாந்து கவுண்டி கிளப் அணியான லங்காஷயர் அணிக்கு எதிரான போட்டியிலும் இடம் பெற்றார்.
தந்தையைப் போலவே இளம் வயதிலேயே திறமையானவராக இருக்கிறார். ராகுல் டிராவிட் நல்ல பேட்ஸ்மேன் என்பதுடன் கிரிக்கெட் கீப்பராகவும் இருந்தது போல, இவரது மகன் சமித் டிராவிட் மிதவேக பந்துவீச்சாளராக இருக்கிறார். மாறிவரும் கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி தனது மகனை ராகுல் டிராவிட் உருவாக்கி வருகிறார். மேலும் இவர் விளையாடும் மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக கருண் நாயர் இருக்க, கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : நான் இவரை மட்டும் கண்மூடித்தனமா நம்புவேன்.. இந்த 3 பேரும் இந்தந்த மாதிரிதான் – பும்ரா பேட்டி
மைசூர் வாரியர்ஸ் அணி : கருண் நாயர், கார்த்திக் சிஏ, மனோஜ் பந்தகே, கார்த்திக் எஸ் யு, சுசித் ஜே, கௌதம் கே, வித்யாதர் பாட்டீல், வெங்கடேஷ் எம், ஹர்ஷில் தர்மனி, கவுதம் மிஸ்ரா, தனுஷ் கவுடா, சமித் டிராவிட், தீபக் தேவடிகா, சுமித் குமார், ஸ்மயன் ஸ்ரீவஸ்தவா, ஜாஸ்பர் இஜே, பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சர்ஃபராஸ் அஷ்ரஃப்.