“என் மனைவிக்கு எந்த தமிழ் கெட்ட வார்த்தையும் சொல்லித் தரவில்லை” – அதிசயமாக நிறைய பேசிய தல தோனி!

0
2176
Dhoni

இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு சொந்த ஊர் ராஞ்சியா இல்லை சென்னையா என்று கொஞ்சம் குழப்பம் வரும் அளவுக்கு அவருக்கு சென்னை மண்ணில் மிக நெருக்கம் உண்டு!

இரண்டு உலக கோப்பைகள் ஒரு ஐசிசி தொடரை வென்ற உலகின் ஒரே கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற அவர். தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. 42 வயதை எட்டி இருந்தாலும் அவருடைய கேப்டன்சி மற்றும் கீப்பிங் திறமையும், பவர் ஹிட்டிங் எபிலிட்டியும் எவ்வளவு கூர்மையாக இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டினார்.

மேலும் முட்டியில் ஏற்பட்டிருந்த காயத்தின் வலியோடு அவர் இந்த முழு தொடரையும் ஓய்வெடுக்காமல் விளையாடி அணியை வழிநடத்தியது, அவர் அணியின் மீதும் விளையாட்டின் மீதும் எவ்வளவு அர்ப்பணிப்பான எண்ணத்தை வைத்திருக்கிறார் என்று வெளிக்காட்டியது.

தற்பொழுது மகேந்திர சிங் தோனி திரைப்படத் தயாரிப்புக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு இருக்கிறார். மிகக் குறிப்பாக அவர் தமிழ் பட தயாரிப்புக்குள் முதன்முதலாக வந்திருக்கிறார். எல்ஜிஎம் என்ற தமிழ் படத்தை தயாரித்து இருப்பதன் மூலம் அவர் பிரவேசம் அரங்கேறி இருக்கிறது.

- Advertisement -

நேற்று அந்தத் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நதியா யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதில் கலந்துகொண்டு பேசிய மகேந்திர சிங் தோனி மிகவும் கலகலப்பான பேச்சை வெளிப்படுத்தினார்.

நேற்று அவர் பேசும் பொழுது பிரபலமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாசகமான விசில் போடுங்க என்ற வார்த்தையோடு ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய அவர் ” நான் எனது மனைவிக்கு தமிழில் எந்த கெட்ட வார்த்தையையும் சொல்லித் தரவில்லை. காரணம் மிக எளிமையானது. ஏனென்றால் எனக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியாது. ஆனால் எனக்கு வேறு சில மொழிகள் தெரியும்.

இங்கே இருப்பவர்களில் எத்தனை பேர் தற்பொழுது திருமணம் முடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அப்படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கு தெரியும் உங்களுடைய வீட்டின் பாஸ் யார் என்று. என் வீட்டின் பாஸ் என் மனைவி.

திரைப்பட தயாரிப்பு சம்பந்தமாக எனது மனைவி எல்லாவற்றையும் வந்து என்னிடம் விளக்கிய பொழுது, நான் முடிவு செய்தது தமிழ் படங்கள் தயாரிப்பது என்று. எனக்கும் சென்னைக்குமான உறவு மிக நெருங்கியது. 2008 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக நான் அறிமுகமானதும் சென்னை என்னை தத்தெடுத்துக் கொண்டது!” என்று கூறி இருக்கிறார்!