“என் பையன் இப்ப இருக்க இந்த இந்திய வீரர் மாதிரி வரனும்.. அவர் வேற மாதிரி!” – லாரா அதிரடியான பேச்சு!

0
5088
Lara

உலக கிரிக்கெட்டில் எந்த காலத்திலும் சிறந்த வீரர்கள் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த பிரையன் லாராவுக்கு தனி இடம் இருக்கிறது.

அவர் விளையாடும் விதமும், பந்துவீச்சாளரை தனக்கு ஏற்றபடி பந்தை வீச வைக்கும் பேட்டிங் அறிவும் அபாரமானது. எந்த ஆடுகளம்? எந்த பந்துவீச்சாளர்? என்று பார்க்காமல், வருகின்ற பந்துக்கு சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் விளையாடும் ஜாம்பவான் வீரர்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இன்றும் அவருக்கென்று ஒரு தனி புகழ் இருக்கிறது. அவர்கள் நாட்டின் கிரிக்கெட்டின் இளவரசன் என்று ரசிகர்களால் இப்பொழுதும் கொண்டாடப்படுகிறார்.

இவருடைய சமகாலத்தில் சச்சின் இவருக்கு நிகரான புகழோடு இருந்தவர். இவர்கள் இருவரையும் வைத்து யார் சிறந்தவர்கள் என்கின்ற பேச்சு எப்பொழுதும் இருந்தது. இப்பொழுதும் கூட இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் தன்னுடைய மகன் விளையாட்டில் ஈடுபட்டால் எந்த வீரர் போல வர வேண்டும்? என்பது குறித்து சுவாரஸ்யமான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். எனது மகன் ஏதாவது விளையாட்டை தேர்ந்தெடுத்தால், நான் விராட் கோலியின் கமிட்மெண்ட்டையும் டெடிகேஷனையும் அவனுக்கு உதாரணம் காட்டுவேன். பலத்தை நம்பி இருக்காமல் தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டால் மட்டுமே உலகில் நம்பர் ஒன் வீரராக முடியும்.

இந்த உலகக் கோப்பையை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முதல் காரணம் விராட் கோலி. தற்பொழுது இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததால் விராட் கோலியின் ஆட்டம் முக்கியமில்லை என்று மக்கள் பேசலாம். பேசியும் இருப்பார்கள்.

குழு விளையாட்டு என்பது அணி வெற்றி பெறுவது பற்றியது. அதுவே முதல் இலக்காக இருக்க வேண்டும். அடுத்தது துணை இலக்காக ஒரு வீரர் தனிப்பட்ட முறையில் வெற்றி பெறுவது. இதைத்தான் இந்த உலகக் கோப்பை முழுக்க விராட் கோலி இந்திய அணிக்கு கொடுத்தார்.

விராட் கோலி இடம் எனக்கு அதிகம் கவர்ந்தது இது கூட கிடையாது. அவரிடம் என்னை கவர்ந்தது அவருடைய மரபு. ஏனென்றால் கிரிக்கெட்டை நீங்கள் விளையாடும் விதத்தையும் அதன் முகத்தையும் அவர் மாற்றி இருக்கிறார். அவருடைய ஒழுக்கம் எப்பொழுதும் தனித்து நிற்கிறது!” என்று கூறியிருக்கிறார்!