“என் மகன் தோனி இல்ல.. அவன் கிரிக்கெட் விளையாடியத நான் விரும்பல” – கண்ணீர் மல்க துருவ் ஜுரல் தந்தை பேட்டி

0
751
Jurel

இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்காவது ஸ்டில் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற துருவ் ஜுரல், அந்த ஒரு போட்டியில் வெளிப்படுத்திய பேட்டிங் திறமை மற்றும் மன உறுதி ஆகியவற்றின் காரணமாக, இந்திய கிரிக்கெட்டின் இளம் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார்.

மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் எதிர்காலத்தில் விளையாடக்கூடிய வீரராக பார்க்கப்படுகிறார். டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது.

- Advertisement -

இதைவிட மிக முக்கியமாக சுனில் கவாஸ்கர் அவரை அடுத்த மகேந்திர சிங் தோனி என்று புகழ்ந்து பேசி இருந்தார். மேலும் அனில் கும்ப்ளே மகேந்திர சிங் தோனி எட்டிய உயரங்களை இவராலும் எட்ட முடியும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

ஒரே போட்டியின் மூலமாக இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக பார்க்கும் அளவுக்கு முன்னேறியதோடு மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் டீம் மிக முக்கிய வீரரான மகேந்திர சிங் தோனி உடன் ஒப்பிடப்படும் அளவுக்கு துருவ் ஜூரல் உயர்ந்திருக்கிறார்.

இவரது தந்தை ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறுவயதில் தன்னை போலவே தன் மகனும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று இவர் விரும்பி இருக்கிறார். ஆனால் துருவ் ஜுரல் தாய்தான் அவருடைய கிரிக்கெட் ஆர்வத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து துருவ் ஜுரல் தந்தை பேசும் பொழுது ” துருவ் ஜுரல் சிறுவயதில் இருந்தே ராணுவ வீரனான நான் சல்யூட் அடித்து வந்ததை பார்த்து வளர்ந்த பையன். எனவே அவர் அரை சதம் அடித்ததும் சல்யூட் செய்து எனக்கு மரியாதை செய்திருக்கிறார். ஆனால் அது இந்திய மக்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் செய்த மரியாதையாக நான் பார்க்கிறேன். என் மகன் குறித்து இந்திய லெஜன்ட் சுனில் கவாஸ்கர் பேசி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் சுனில் கவாஸ்கர் அவர்கள் கூறியது போலவே இந்திய முன்னால் வீரர்கள் கும்ப்ளே மற்றும் சேவாக் ஆகியோரும் என் மகனை தோனி உடன் ஒப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் என் மகனை தோனி உடன் ஒப்பிட்டுப் பேச மாட்டேன். அவர் இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற மிகப்பெரிய வீரர்.

இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்.. 5 நட்சத்திர இந்திய வீரர்களின் ரேங்க்.. புதிய வெளியீடு

நான் என் மகனை என்னைப் போலவே ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு பத்து வயது முதலே விளையாட ஆரம்பித்தார். இதன் காரணமாக அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போன போது நான் அவரை கண்டித்து இருக்கிறேன். ஆனால் அவனுடைய அம்மா தான் அவரை ஊக்குவித்து கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதித்தார்” என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.