ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்.. 5 நட்சத்திர இந்திய வீரர்களின் ரேங்க்.. புதிய வெளியீடு

0
952
ICC

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றை தோற்று, மூன்றில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் முகமது சமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று இருப்பது, எதிர்கால இந்திய கிரிக்கெட் ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகிறது.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் மிகவும் கடினமான ஒன்று. இப்படியான கடினமான வடிவத்தில் தரமான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார்கள். தொடர்ந்து சிறந்த வீரர்களை உருவாக்கும் சிறந்த தளமாக இந்தியா விளங்கி வருகிறது. கடந்த சில வருடங்களில் இந்தியா கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கிறது.

நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், கில், துருவ் ஜுரல், சர்பராஸ் கான் ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டு இருக்கிறார்கள். இதில் ஜெயஸ்வால் தன் வாழ்க்கையின் சிறந்த டெஸ்ட் தரவரிசை நிலையை அடைந்திருக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 31 இடங்களில் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் அதிகபட்ச சிறந்த இடத்தை இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பெற்றிருக்கிறார். கடைசி இடம் கில்லுக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த ஐந்து வீரர்களில் ரிஷப் பண்ட் ஒருவராக இருக்கிறார். அவர் சாலை விபத்தில் சிக்கி வருட கணக்கில் விளையாடாமல் இருந்தாலும், அவர் மீண்டும் வந்து விளையாடும் வரையில் அவரது புள்ளி குறையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 893 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. திடீரென நுழைந்த துருவ் ஜுரல்.. ரிஷப் பண்ட் வந்தாலும் மாற்றம் இல்லை.. பிசிசிஐ தரப்பில் கசிந்த தகவல்கள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்களின் நிலை :

விராட் கோலி 9வது இடம் 744 புள்ளிகள்.
ஜெய்ஸ்வால் 12வது இடம் 727 புள்ளிகள்
ரோகித் சர்மா 13வது இடம் 720 புள்ளிகள்
ரிஷப் பண்ட் 14வது இடம் 699 புள்ளிகள்
சுப்மன் கில் 31 வது இடம் 616 புள்ளிகள்