இந்திய அணிக்கு தேர்வான அன்று எனக்கு இப்படித்தான் இருந்தது! என் தாய், தந்தை கண்ணீர் விட்டதை முதன்முறையாக கண்டேன்! – திலக் வர்மா பேட்டி!

0
2009

இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திலக் வர்மா, அறிவிப்பு வந்த அன்றைய இரவு தனக்கு எப்படி இருந்தது? மற்றும் என்னென்ன நடந்தது? என்பதை பகிர்ந்து கொண்டார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் பல இளம் வீரர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு வேறொரு திட்டம் வைத்திருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தெற்கு ஜோன் அணிக்கு விளையாடி வரும் திலக் வர்மா, நார்த் ஜோன் அணிக்கு எதிராக விளையாடி வந்தபோது அன்று மாலை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அப்போது எப்படி எல்லாம் உணர்ந்தேன்? என்னென்ன நடந்தது? என்பது குறித்து உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

“அறிவிப்பு வந்தவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் என்னுடைய பெற்றோர்களுக்கு வீடியோ கால் செய்தேன். உடனே அவர்கள் ஆனந்த கண்ணீரில் திளைத்து விட்டார்கள். பல தகவல்களை, சிறுவயதில் இருந்து எனக்கு நடந்ததை எல்லாம் நினைவு கூர்ந்தார்கள். அதன் பிறகு என்னுடைய பயிற்சியாளருக்கு நான் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவரும் உருக்கமாகிவிட்டார்.”

“ஆனால் எனக்குள் பூரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டோம். இனி நானும் ஒரு இந்திய வீரர் என்கிற தைரியம் எனக்குள் அதிகமாக வந்துவிட்டது. நேற்று இருந்த நம்பிக்கைக்கும் இப்போது இருக்கும் நம்பிக்கைக்கு நிறைய வித்தியாசம் வந்துவிட்டது.

- Advertisement -

என்னுடைய இந்த வளர்ச்சிக்கு சச்சின் டெண்டுல்கர், பொல்லார்டு ஆகிய ஜாம்பவான்கள் கொடுத்த அறிவுரைகள் முக்கியமானதாக பார்க்கிறேன். அதேநேரம் பேட்டிங்கில் இப்படி ஒரு இக்கட்டான சூழல் வந்தால் எப்படி அணுகுவாய்? என்கிற கேள்விகளை பல வீரர்கள் என்னிடம் முன் வைத்திருக்கின்றனர். அதற்கு எப்படி விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நான் கற்பனையில் செய்து வந்தேன். அதுவும் எனக்கு உதவியது. இவற்றால் தான் நான் இந்திய அணிக்கு வந்ததாக நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இந்திய அணி நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளை 40 அல்லது 50 ரன்களுக்குள் இழந்துவிட்டால், அந்த சூழலில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? அணியை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும்? என்று தொடர்ந்து நினைத்துப் பார்த்து, அந்த அழுத்தமான சூழலில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். இதுவும் எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது.” என்றார்.