“பையன் துடிப்பா இருக்கான், ஆனால்..” – ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இருப்பாரா? ரகானே ப ஜெய்ஸ்வால் என்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது தில்!

0
221

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் எடுக்கப்பட்டுள்ள ஜெய்ஸ்வால், பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்படுவாரா? என்கிற கேள்விக்கு தன்னுடைய பதிலை கூறியதோடு மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார் துணை கேப்டன் ரகானே.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் துவக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தன்னுடைய அபாரமான பேட்டிங் மூலம் 14 போட்டிகளில் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 625 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் குறிப்பாக இவரது சராசரி கிட்டத்தட்ட 50 ஆகும். மேலும் இவருடைய ஸ்ட்ரைக்-ரேட் 170ல் இருக்கிறது.

- Advertisement -

மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவர் கடந்த சீசனில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகள் என இரண்டிலும் தன்னுடைய சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் விரைவாகவே எடுக்கப்பட்டுள்ளார்.

ஜெய்ஸ்வால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக எடுக்கப்பட்டார். ஆனால் பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார்.

டெஸ்ட் அணியில் புஜாரா எடுக்கப்படவில்லை. ஆகையால் நம்பர் 3 இடத்தில் ஜெய்ஸ்வால் விளையாட வைக்கப்படுவாரா? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தது. இதுகுறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பதில் கூறியுள்ளார்.

- Advertisement -

“ஜெய்ஸ்வால் துடிப்பான இளம் வீரர். சிறந்த பார்மில் இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடினார். நான் அவருடன் விளையாடி இருக்கிறேன். மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆக வளர்ந்து வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு இங்கே வந்திருக்கிறார்.

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் நான் அவருக்கு சில செய்திகளை கூற விரும்புகிறேன். அவருடைய இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். மனதில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும். மேலும் இது சர்வதேச போட்டி என்று நினைக்காமல் சாதாரணமாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சிறந்தது.

மேலும் பிளேயிங் லெவனில் எடுக்கப்படுவோமா? மாட்டோமா? என்பதை பற்றி சிந்திக்க வேண்டாம். தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இளம் வயதில் இருக்கிறார். தனக்கு எது வரவில்லை என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து கற்றுக் கொண்டே இருத்தல் சிறந்தது. இதுதான் சரியான தருணமும் கூட.

அவரை பிளேயிங் லெவனில் எடுக்கிறோமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். புஜாரா இல்லை என்பதால் அவருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.” என்று பேசினார் ரகானே.