“என் இதயமே நொறுங்கிடுச்சு” – எம்,எஸ் தோனிக்காக உணர்ச்சிப்பூர்வமாக பேசிய இர்ஃபான் பதான்!

0
863

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தது . எந்த ஒரு வீரரும் அதிகபட்சமாக ரன்களை குவிக்கவில்லை என்றாலும் அனைவரது பங்களிப்பினால் 20 ஓவர்களில் 167 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி நிர்ணயிக்க உதவியது .

- Advertisement -

சென்னை அணியின் சிவம் துபே அதிகபட்சமாக 25 ரன்களும் ருத்ராஜ் 24 ரன்களும் அம்பட்டி ராயுடு 23 ரண்களும் எடுத்தனர் . இறுதியாக ஆட வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தன்னுடைய வழக்கமான அதிரடியின் மூலம் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .

இதில் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும் . இந்தத் தொடர் முழுவதுமே இறுதி கட்டங்களில் களம் இறங்கி தனது அதிரடியின் மூலம் அணிக்கு தேவையான பங்களிப்பை கொடுத்து வருகிறார் கேப்டன் தோனி . . இந்த ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக பயிற்சியின்போது கால் முட்டியில் தோனிக்கு காயம் ஏற்பட்டது . இந்தத் தொடர் முழுவதும் காயத்துடனே விளையாடி வருகிறார் எம்.எஸ். தோனி .

நேற்றைய போட்டியில் அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டிய இறுதி கட்டங்களில் தோனி பழைய காலங்களில் கிரிக்கெட் விளையாடியது போல் வேகமாக ஒரு ரன்களை எல்லாம் இரண்டு ரன்கள் ஆக மாற்றினார். அவரது காயத்தின் காரணமாக சில இடங்களில் நொண்டி ஓடியது ரசிகர்களுக்கு முன்னால் வீரர்களுக்கும் மனதை கஷ்டப்படுத்துவதாக இருந்தது .

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் எம் எஸ் தோனியுடன் இந்திய அணிக்காக விளையாடிய வருமான இர்பான் பதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் . அந்தப் பதிவில் கூறி இருக்கும் அவர் ” எம் எஸ் தோனி விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுக்கும் போது காலில் வலியுடன் ஓடுவதைப் பார்த்து என் இதயமே உடைந்து விட்டது . அவர் சிறுத்தையைப் போல் பாய்ச்சலுடன் ஓடியவர் இன்று உணர்வுபூர்வமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் .