விசாகப்பட்டினத்தில் நான் அடித்த முதல் சதம் பத்து போட்டிகளை தந்தது ; இங்கு ராஜஸ்தானில் நான் அடித்த 183 ஒரு வருடத்தை தந்தது – பழைய நினைவுகளில் மூழ்கிய மகேந்திர சிங் தோனி!

0
4803
Dhoni

இன்று ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது!

டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 202 ரன்களை குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பவர் பிளே சிறப்பாக அமையவில்லை. நடுவில் பேட்டிங் செய்ய வந்த சிவம் துபே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த பொழுதும் அது வெற்றிக்கு தேவையான அளவு இல்லை.

இந்த காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை இழந்து மூன்றாவது இடத்திற்கு தற்பொழுது சரிந்து உள்ளது!

தோல்விக்குப்பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ” அவர்கள் தேவையான ஸ்கோருக்கு கொஞ்சம் அதிகமான ஸ்கோரை அடித்தனர். நாங்கள் பவர் பிளேவில் ரன்களை கொடுத்து விட்டோம். அப்போது பேட்டிங் செய்ய விக்கெட் நன்றாகவும் இருந்தது. மிடில் ஓவர்களில் எங்களது பவுலர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் பல எட்ஜுகள் பவுண்டரிகளாக சென்றன. குறைந்தது 5, 6 முறை இப்படி சென்றது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்களால் பவர் பிளேவில் நல்ல தொடக்கத்தைப் பெற முடியவில்லை.

- Advertisement -

பதிரனாவின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்ததாக நான் உணர்கிறேன். அவர் மோசமாக பந்து வீசவில்லை. அவர் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பதை ஸ்கோர் போர்டு பிரதிபலிக்காது. ஜெய்ஸ்வால் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார்.

இங்கு பந்துவீச்சில் எது நல்ல லென்த் என்று நாங்கள் மதிப்பீடு செய்ய வேண்டியது இருந்தது. ஒரு கேப்டனாக இதை பந்துவீச்சாளர்களிடம் சொல்வதற்கு முன்னால் நாங்கள் சில பவுண்டரிகளை கொடுத்து விட்டோம். இறுதியில் ஜுரல் நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் ஆட்டம் எங்களிடமிருந்து பவர் பிளேவில்தான் வெளியேறிவிட்டது.

இது எனக்கு மிகவும் சிறப்பான ஒரு மைதானம் ஆகும். விசாகப்பட்டினத்தில் எனக்கு முதல் ஒருநாள் போட்டி சதம் வந்தது. அது எனக்கு மேலும் விளையாட 10 போட்டிகளை தந்தது. ஆனால் நான் இங்கு அடித்த 183 எனக்கு மேலும் ஒரு வருடத்தை தந்தது. மீண்டும் இங்கு வந்தது நன்றாக இருந்தது!” என்று அவர் கூறியிருக்கிறார்!