என்னோட ஃபேவரைட் ஐபிஎல் டீம் சிஎஸ்கே இல்ல இவங்கதான் கண்டிப்பா இந்தவாட்டி கப் அடிப்பாங்கன்னு நம்பறேன் – சுனில் கவாஸ்கர்!

0
602
Gavaskar

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த முறை ஐந்துமுறை கோப்பையை வென்ற மும்பை அணி பிளேஆப் சுற்று வாய்ப்பில் இருக்கும் என்று பெரிதாக யாரும் கணிக்கவே கிடையாது.

ஆனால் சராசரியாகத் தோல்விகளுடன் சேர்த்து வெற்றிகளையும் பெற்றுவந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்பொழுது 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்று ப்ளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் பலமாகவே நிற்கிறது.

- Advertisement -

சென்னை லக்னோ பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் தங்களின் கடைசி ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மும்பை அணியின் ப்ளேஆப் வாய்ப்பு அத்துடன் முடிந்துவிடும்.

அதே சமயத்தில் ஏதாவது ஒரு அணி தோற்கும் என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

இப்படியானதொரு பரபரப்பான கட்டத்தில் தற்பொழுது ஐபிஎல் 16 வது சீசன் வந்து நின்றிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி தவிர்த்து சென்னை லக்னோ பெங்களூர் மும்பை அணி தாண்டி ராஜஸ்தான் அணி வரை ஐந்து அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்கின்றன. இதுவரை குஜராத் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அதிகாரப்பூர்வமாக முதலிடத்தையும் தக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று டெல்லியை அதன் சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் ஏறக்குறைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து நேரடியாக பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும். இல்லையென்றால் லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியிடம் சில நாட்களுக்கு முன்பு தன் சட்டையில் கையெழுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர் தனக்கு ஐபிஎல் தொடரில் பிடித்த அணி எது? மற்றும் அந்த அணி குறித்த தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சுனில் கவாஸ்கர் இது குறித்து கூறும்பொழுது ” எனக்கு ஐபிஎல் தொடரில் மிகவும் பிடித்த அணி மும்பை இந்தியன்ஸ் அணிதான். அவர்கள் இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் அவர்கள் வெல்வார்கள் என்றும் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!