சச்சின் கோலி இல்லை.. என்னைப் பொறுத்தவரை ODI வரலாற்றில் சிறந்த வீரர் இவர்தான்.. முரளிதரன் ஓப்பன் டாக்.!

0
16329

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக சாதனை படைத்திருப்பவர் முத்தையா முரளிதரன். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார். 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 800 விக்கெட்டுகளையும் 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 534 விக்கெட்டுகளையும் 12 t20 சர்வதேச போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சமீபத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 800 என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. உலக கிரிக்கெட் சாதனையாளர்களில் தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் முத்தையா முரளிதரன் நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய கலந்தாய்வு ஒன்றில் பங்கு கொண்டார். அதில் கிரிக்கெட் வரலாற்றில் எல்லா காலத்திலும் சிறந்த வீரர் யார் என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு முத்தையா முரளிதரன் அளித்த பதில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பலரும் அவரிடம் இருந்து இது போன்ற ஒரு பதிலை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். முத்தையா முரளிதரன் எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய வீரரையே தேர்வு செய்தார். ஆனால் அந்த வீரர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இல்லை. அதுதான் அனைவருக்குமான ஆச்சரியமாக இருக்கிறது.

எல்லா காலகட்டங்களிலும் சிறந்த வீரராக இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வீரேந்தர் சேவாக்கை தேர்வு செய்திருக்கிறார் முத்தையா முரளிதரன். விரந்தர் சேவாக் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி மற்றும் எம் எஸ் தோனி போன்ற இந்திய அணியின் லெஜன்ட் வீரர்களை விட குறைவான ரன்கள் மற்றும் சதங்களையே பெற்றிருக்கிறார். இருந்தாலும் அவர் போட்டியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் காரணமாக தன்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டின் எல்லா காலகட்டங்களுக்குமான சிறந்த வீரர் விரேந்தர் சேவாக் தான் என தெரிவித்தார் முத்தையா முரளிதரன்.

விரேந்தர் சேவாக் போன்ற ஒரு வீரரால் தனி ஆளாக போட்டியை மாற்றி விட முடியும் என தெரிவித்த அவர் அவருக்கு எதிராக பல போட்டிகளில் விளையாடி இருப்பதாகவும் உலகின் மிகச் சிறந்த வீரர் அவர் என்றும் தெரிவித்தார். 14 வருடங்கள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரேந்தர் சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளும் 254 ஒரு நாள் போட்டிகளிலும் 19 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இவற்றில் டெஸ்ட் போட்டிகளில் 8,586 ரன்களும் ஒரு நாள் போட்டிகளில் 8,273 ரண்களும் டி20 போட்டிகளில் 394 ரன்களும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்காக ஒரு எண்ணின் செல் 300 ரன்கள் எடுத்த முதல் வீரர் இவர் தான். மேலும் இரண்டு முறை ஒரே இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் சேவாக். மேலும் தன்னுடைய பந்துவீச்சை கணித்து ஆடக்கூடிய வீரர்களில் வீரேந்தர் சேவாக் ஒருவர் என இதற்கு முன்பு முத்தையா முரளிதரன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றைய இங்கிலாந்து கிரிக்கெட் பின்பற்றி வரும் பஸ்பால் ஆட்டம் வருவதற்கு முன்பாகவே 2000 வருடங்களின் துவக்கத்திலேயே அதிரடியை டெஸ்ட் போட்டிகளில் கொண்டு வந்தவர் சேவாக் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அதிரடி ஆட்டத்தின் காரணமாக இந்தியா பல டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்கிறது. வேகப்பந்து மற்றும் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளங்களிலும் தனது அதிரடியால் போட்டியை மாற்றக்கூடியவர் சேவாக்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்களான இர்ஃபான் பதான் மற்றும் பியூஸ் சாவுல ஆகியோர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக தேர்வு செய்தனர். இவர்களுடன் இந்த நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மற்றும் இந்தியா அணியின் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸை எல்லா காலங்களிலும் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்தனர். இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை எல்லா காலங்களுக்குமான சிறந்த வீரராக தேர்வு செய்தார்.