நிம்மதி பெருமூச்சு விட்ட சிஎஸ்கே.. காயமடைந்த வீரர் வருகை.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
404
Dhoni

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மினி ஏலத்தின் மூலமாக, மிக வலிமையான அணியாக மாறி இருந்தது. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை மினி ஏலத்தில் எந்த அணிகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் இரு அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே வலிமையாக இருந்தன.

இந்த நிலையில் அம்பதி ராயுடு இடத்துக்கு குறைந்தது ஆறு ஆண்டுகள் ஆவது விளையாடக்கூடிய வகையிலான வீரரை சிஎஸ்கே தேடியது. ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ரெய்னா மற்றும் அம்பதி ராயுடு இடங்கள் என்பது டெம்ப்ளேட் மாதிரியானது. அந்த டெம்ப்ளேட்டில் விளையாடக்கூடிய வீரர்கள் எப்பொழுதும் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இருப்பார்கள்.

- Advertisement -

இந்த முறை நடந்த மினி ஏலத்தில் அம்பதி ராயுடு இடத்திற்கு டேரில் மிட்சல் மற்றும் இந்திய உள்நாட்டு வீரரான சமீர் ரிஸ்வி என இரண்டு வீரர்களை சிஎஸ்கே வாங்கியது. இதற்கு அடுத்து இறுதி கட்ட ஓவர்களில் வீசுவதற்கு பதிரனா அணியில் இருக்கும் பொழுது, அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் தேவை என்று மிகச் சரியாக முஸ்தஃபீஸூர் ரஹ்மானை வாங்கியது.

மேலும் ரச்சின் ரவீந்தரா மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தது போனஸ் மாதிரியாகத்தான் அமைந்தது. இந்த நிலையில் கான்வே காயமடைய ரச்சின் ரவிந்தராவை வாங்கியது மிகவும் நல்ல விஷயமாக சிஎஸ்கே அணிக்கு மாறியது.

நிம்மதி பெருமூச்சு விட்ட சிஎஸ்கே

இந்த நிலையில் இலங்கையணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடும் கிரிக்கெட் தொடர் சிஎஸ்கே அணிக்கு பெரிய தலைவலியாக மாறியது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் பதிரனா காயமடைந்தார். இதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று பங்களாதேஷ் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் காயமடைந்தார்.

- Advertisement -

இறுதிக்கட்ட ஓவர்களுக்கான முக்கிய பந்துவீச்சாளர் மற்றும் அவருக்கான மாற்றுப் பந்துவீச்சாளர் இருவரும் காயம் அடைந்தது சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. சிஎஸ்கே அணியில் புதிய பந்தில் வீசுவதற்கு நிறைய வேகப்பத்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடைசிக்கட்ட ஓவர்களுக்கு வீச இந்திய பந்துவீச்சாளர்கள் இல்லை.

இதையும் படிங்க: 3 கேள்விக்கு மட்டும்.. பதில் சொல்லாமல் அடம் பிடித்த ஹர்திக் பாண்டியா.. என்ன காரணம்.?

இதன் காரணமாக கவலை அடைந்து இருந்த சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு தற்பொழுது மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. நேற்று உடல் முழுவதும் கிராம்ப் ஏற்பட்டு நடக்க முடியாமல் ஸ்ட்ரெச்சரில் சென்ற முஸ்தஃபீஸூர் ரஹ்மான், இன்று உடல்நிலை தேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் இணைவதற்கு வந்திருக்கிறார். மேலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டியிலேயே விளையாடவும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக சிஎஸ்கே முகாம் தற்பொழுது நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது!