சிஎஸ்கே முஸ்தபிசுர் ஐபிஎல் விளையாடி கத்துக்க எதுவும் இல்லை.. அவர விட்டுருங்க – பங்களாதேஷ் கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் பேச்சு

0
49
Mustafizur

2024 நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பங்களாதேஷ் நாட்டின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் ஆறு போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். தற்பொழுது இவர் டி20 உலக கோப்பைக்கு தயாராக மே இரண்டாம் தேதி நாடு திரும்புகிறார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பைக்கு தயாராவதற்காக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்காக மே ஒன்றாம் தேதி அவர் நாடு திரும்ப முதலில் அழைக்கப்பட்டார். இது சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரே ஒரு நாள் மட்டும் சேர்த்து இருந்து ஒரு போட்டி விளையாடி கொடுத்துவிட்டு போக வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டது. இதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சம்மதிக்க அவர் மே இரண்டாம் தேதி போட்டியை முடித்து விட்டு கிளம்புகிறார்.

தற்பொழுது சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் இவரது இருப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு எதிராக முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதற்கு அடுத்து மும்பைக்கு எதிராக கடந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சு செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தால்.

தற்பொழுது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் செயல்பாட்டு தலைவர் ஜலால் யூனுஸ் பேசும் பொழுது “முஸ்தஃபிசூர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் அவர் கற்றுக் கொள்வதற்கு எதுவுமே கிடையாது. அவர் தேவையானவற்றை கற்று விட்டார். அவர் மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடிய வீரர்கள் யாராவதுதான் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதனால்பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு எந்த லாபமும் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 17.3 ஓவர்.. ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ்க்கு நடந்த சோகம்.. எப்படி இருந்த டீம் இப்படி ஆயிடுச்சு

நாங்கள் திரும்ப அவரை நாடு திரும்ப அழைப்பது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் விளையாடுவதற்காக மட்டுமே கிடையாது. அவரது உடல் தகுதிக்காக அவரது பணிச்சுமையை பராமரிக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் திரும்ப அழைக்கிறோம். ஐபிஎல் தொடரில் அவரது பணிச்சுமையை குறைத்து அவரது உடல் தகுதியை பாதுகாக்க முடியாது” எனக் கூறியிருக்கிறார்.