17.3 ஓவர்.. ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ்க்கு நடந்த சோகம்.. எப்படி இருந்த டீம் இப்படி ஆயிடுச்சு

0
155
GT

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லிஸ் கேப்பிட்டல் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஐபிஎல் மோசமான பேட்டிங் செயல்பாடு பதிவாகி இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். இதற்கு அடுத்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 8(6), விருதிமான் சகா 2(10) என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால் குஜராத் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

- Advertisement -

இதைத்தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் 12 (9), டேவிட் மில்லர் 2 (6), அபினவ் மனோகர் 8 (14), ராகுல் திவாட்டியா 10 (15), சாருக் கான் 0(1), மோகித் சர்மா 2 (14), நூர் அகமத் 1 (7), ஸ்பென்சர் ஜான்சன் 1* (1) ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தார்கள்.

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய ரஷித் கான் மட்டும் கொஞ்சம் அதிரடி காட்டினார். அவர் 24 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 17.3 ஓவரில் 89 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் மட்டும் பந்துவீசி 14 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா இரண்டு ஓவருக்கு எட்டு ரன் மட்டும் தந்து இரண்டு விக்கெட், ஸ்டப்ஸ் ஒரு ஓவருக்கு 11 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி கூட சேர்ந்து மேக்ஸ்வெல்லுக்கும் அழுத்தம் அதிகமாயிடுச்சு – ரிக்கி பாண்டிங் ஆதரவு

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குள் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கடுத்து இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்தது. வலிமையான அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று எடுத்த 89 ரன்கள் அதன் மிகக் குறைந்தபட்ச ரன் ஆகும். ஹர்திக் பாண்டியாவின் விலகல் மற்றும் முகமது சமியின் காயம், அந்த அணியை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது.