“நான் இப்ப ரஞ்சி பைனல்ல சதம் அடிச்சது.. அவரை இம்ப்ரஸ் பண்ணதான்” – முசிர் கான் பேட்டி

0
272
Musheer

தற்பொழுது மும்பை வான்கடை மைதானத்தில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபியின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. ஏறக்குறைய இன்னொரு முறை ரஞ்சி டிராபியை வெல்வதற்கான முன்னிலையில் மும்பை அணி இந்த போட்டியில் இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்களும், இரண்டாவது பேட்டிங் செய்த விதர்பா அணி 105 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளமாக தெரிகிறது. எனவே இந்த போட்டி மூன்றாவது நாளில் இன்று முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் போட்டி நான்காவது நாளுக்கு சென்று இருக்கிறது.

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணமாக மும்பை அணிக்காக முதல் ரஞ்சி சீசன் வாய்ப்பை பெற்றிருக்கும் சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் இருக்கிறார். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் கேப்டன் ரகானே உடன் இணைந்து ஒரு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 150 ரன்களுகும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.

மிகப் பொறுப்புடன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியில் விளையாடிய அவர் மொத்தம் 360 பந்துகள் எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரஞ்சி கால் இறுதியில் இந்த சீசனில் வாய்ப்பு பெற்ற அவர் இரட்டை சதம் அறிமுகத்திலேயே அடித்தார். இதற்கு அடுத்து தமிழகத்திற்கு எதிராக அரை இறுதியில் அரை சதம் அடித்தார். தற்போது இறுதிப் போட்டியில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதன் காரணமாக மும்பை அணி தற்பொழுது 500க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை வைத்து வலிமையாக இருக்கிறது.

இன்றைய நாள் போட்டிக்கு பின் பேசிய முசிர் கான் கூறும் பொழுது ” சச்சின் சார் மைதானத்திற்கு வந்திருப்பது எனக்கு தெரியாது. பிறகு பெரிய திரையில் பார்க்கும்பொழுதுதான் அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். அப்பொழுது நான் 60 ரன்கள் எடுத்திருந்தேன். அவரைப் பார்த்ததும் உத்வேகம் கிடைத்தது. எப்படியாவது பெரிய ரன்கள் அடித்து அவரை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

இந்த போட்டியில் நான் பெரிய இரண்டு வீரர்களுடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைக்கும் பொழுது நிறைய கற்றுக் கொண்டதுடன், அதில் எனக்கு நிறைய வசதிகளும் கிடைத்தது. ரகானே பாயுடன் இணைந்து விளையாடிய பொழுது எல்லோரும் அவர் விக்கெட்டை கைப்பற்றவே நினைத்தார்கள். இது எனக்கு வசதியாக அமைந்தது.

இதையும் படிங்க : “அடிச்சு சொல்றேன்.. கோலி டி20 உலக கோப்பையில் விளையாடுவார்.. காரணம் வித்தியாசமானது” – ஸ்டூவர்ட் பிராட் கருத்து

ஸ்ரேயாஸ் பாய் உடன் இணைந்து விளையாடும் பொழுது அவர் பெரிய ரன்னுக்கு நாம் முடிந்தவரை செல்ல வேண்டும் என்று கூறி என்னை வழி நடத்தினார். ரஞ்சி இறுதிப் போட்டியில் சதம் அடிப்பது எனக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது. இப்பொழுது அது நனவாகி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.