சச்சினை காப்பாற்றி.. மோசமான சாதனையை சொந்தமாக்கிய முஸ்பிக்யூர் ரஹீம்.. வினோத சம்பவம்!

0
240
Sachin

ஆசிய கண்டத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடும் நாடாக பங்களாதேஷ் இருந்து வருகிறது. மேலும் இரண்டாயிரத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடாக முன்னேறியது.

ஆனாலும் கூட இந்த உலகக் கோப்பை தொடரில் ஆசிய சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணி ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட, பங்களாதேஷ் அணியால் ஏற்படுத்த முடியாதது தொடர்ந்து வரும் சோகமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த அணிக்கு சமீபத்தில் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார். பங்களாதேஷ் அணி நவீனம் அடைவதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்தது.

இப்படி இருந்த நிலையிலும் கூட பங்களாதேஷ் அணியால் சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை உருவாக்க முடியாமலே இருந்து வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணமாக அவர்கள் உள்நாட்டில் விளையாடும் எல்லா ஆடுகளங்களும் பெரும்பாலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மேலும் மெதுவான ஆடுகளங்களாகவே இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய பலத்தில் விளையாடி விளையாடி வெளியில் வெற்றிகள் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தொடர் தோல்விகள் வந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement -

இன்று பங்களாதேஷ் அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2005ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணிக்கு 18 ஆண்டுகளாக விளையாடி வரும் முஸ்பிக்யூர் ரஹீம் மோசமான ஒரு சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த வீரராக சச்சினை பின்னுக்கு தள்ளி தற்பொழுது ரஹிம் முதலிடத்திற்கு வந்திருக்கிறார். எந்த ஒரு வீரரும் விரும்பாத சாதனை அவருக்கு சொந்தமாகி இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த வீரர்களை கீழே பார்க்கலாம்.

257 போட்டிகள் ரஹீம்
256 போட்டிகள் சச்சின்
249 போட்டிகள் ஜெயவர்த்தனே
241 போட்டிகள் கெயில்
240 போட்டிகள் ஜெயசூர்யா
234 போட்டிகள் ஷாகிப் அல் ஹசன்