சச்சின் சாதனையை உடைத்த முஷீர் கான்.. 8வது விக்கெட்டுக்கு இன்னொரு ரெக்கார்டு.. துலீப் டிராபி 2024

0
86
Musheer

நேற்று துவங்கிய துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் சர்பராஸ் கான் தம்பி முஷீர் கான் துலீப் டிராபி அறிமுக போட்டியில் சச்சின் சாதனையை முறியடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்திய பி அணி முதலில் பேட்டிங் செய்து 94 ரன்கள் எடுத்து முக்கிய ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்குப் பிறகு ஜோடி சேர்த்த முஷீர் கான் மற்றும் நவ்தீப் ஷைனி இருவரும் சேர்ந்து துலீப் டிராபி கிரிக்கெட்டில் எட்டாவது விக்கெட்டுக்கு மகத்தான சாதனை படைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

முஷீர் கான் – நவ்தீப் ஷைனி

நேற்று இந்த இருவரும் சேர்ந்து விளையாடி 94 ரன்கள் 7 விக்கெட்டுகளை எழுந்திருந்த அணியை 202 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்று கொண்டு வந்தார்கள். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்த ஜோடி மிகச் சிறப்பாக தொடர்ந்து விளையாடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. இந்த ஜோடி ஒட்டுமொத்தமாக எட்டாவது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 205 ரன்கள் குவித்தது. மேலும் துலீப் டிராபி வரலாற்றில் இதுவே எட்டாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

- Advertisement -

சச்சின் சாதனை முறியடிப்பு

இந்த போட்டியில் முஷீர் கான் சிறப்பாக விளையாடி 373 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 181 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் துலீப் டிராபி அறிமுக போட்டியில் சச்சின் 159 ரன்கள் எடுத்திருந்த சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில் பாபா அபராஜித் 212, யாஸ் துல் 193 ரன்கள் எடுத்து முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 56 ரன் 2 விக்கெட்.. தமிழகத்தின் இந்திரஜித்.. போராடி ருதுராஜ் அணியை காப்பாற்றினார்.. புச்சி பாபு 2024

இவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய நவ்தீப் ஷைனி 144 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இந்திய பி அணி இறுதியாக 116 ஓவர்கள் விளையாடி 321 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் தரப்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -