இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது எனவும் வேறு ஒரு வீரருக்குத்தான் கொடுக்க வேண்டும் எனவும் தமிழக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் கூறியிருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதம் ஜூலை 20ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் முதல் முறையாக சாய் சுதர்சன் வாய்ப்பு பெற்று இருக்கிறார். மேலும் இன்னொரு பேட்ஸ்மேனாக கருண் நாயர் மறு வாய்ப்பு பெற்றிருக்கிறார். மேலும் இவர்களுடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பெங்கால் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரனும் இடம்பெற்று இருக்கிறார்.
தற்போது இந்த மூன்று பேரில் இரண்டு பேர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதில் எந்த இரண்டு பேர் இடம் பெற வேண்டும் என்பது குறித்து இந்திய மற்றும் தமிழகத்தின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் மிகவும் வெளிப்படையான முறையில் பேசி இருக்கிறார்.
சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வேண்டாம்
இது குறித்து அபினவ் முகுந்த் பேசும் பொழுது “முதலில் அபிமன்யு ஈஸ்வரனுக்குதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் இந்திய அணிக்கு அழைக்கப்படும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்படுகிறார். தற்போது கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மூன்று மாதங்கள் அவர் அங்கேயே இருந்தார்”
இதையும் படிங்க : எனக்கு வயசு ஆயிடுச்சுனு தோண காரணமே இந்த தமிழ்நாட்டு பையன்தான்.. என் ஓய்வு அப்போதுதான் – தோனி பேச்சு
“ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பது போல, உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரனுக்கும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு மரியாதை இருக்கும். மேலும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு முதலில் வாய்ப்புகள் கொடுத்து, அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்த்துவிட்டு வேண்டுமானால் அடுத்து சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தரலாம்” என்று கூறியிருக்கிறார்.






