தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவிலான புச்சி பாபு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மாநில அணிக்காக விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் சுனில் நரைன் போல பந்துவீசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இன்று தமிழ்நாடு மற்றும் மும்பை மாநில அணிகளுக்கு இடையே புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடைசி ஒரு ஓவர் பந்து வீசிய ஸ்ரேயாஸ் ஐயர் ஏழு ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த ஓவரைதான் சுனில் நரை போலவே அவர் வீசினார்.
கம்பீர் கனவு பிளான்
இந்திய கிரிக்கெட்டில் கங்குலி மற்றும் தோனி காலத்தில் ஒரு கட்டத்தில் நான்கு பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்தார்கள். இதன் காரணமாக தேவைக்கு தகுந்தபடி பந்துவீச்சாளர்களை ரொட்டேஷன் செய்ய கேப்டனுக்கு வசதியாக இருந்தது. மேலும் இப்படி பகுதி நேர பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி அதிக திருப்புமுனைகளையும் உருவாக்க முடிந்தது.
ஆனால் இவர்களின் காலத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். இதனால் ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களை அணியில் சேர்க்க பேட்டிங் வரிசை ஏழு வரையில் மட்டுமே வைக்க முடிந்தது. இதை உடைத்து இந்திய பேட்டிங் வரிசையில் பகுதி நேர பந்துவீச்சாளர்களை உருவாக்குவது கம்பீரின் கனவு திட்டமாக இந்திய அணியில் தற்போது இருந்து வருகிறது. இதற்கான வேலைகள் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆரம்பித்துவிட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உறவு
இந்த நிலையில்தான் ஸ்ரேயாஸ் ஐயர் இன்று தமிழக அணைக்கு எதிராக சுனில் நரைன் வீசும் முறையில் பந்துவீசி ஆச்சரியப்படுத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுனில் நரை இருவருமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து அவரைப் போல பந்து வீச நேரடியாக
இதையும் படிங்க : ஐசிசி தலைவர் ஆகிட்டேன்.. கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்யாமல் விடமாட்டேன் – ஜெய் ஷா பேட்டி
ஸ்ரேயாஸ் ஐயர் பயிற்சி பெற்று வந்தார். மேலும் கடந்த வருடம் அதே அணியில் மென்டராக கம்பீர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆப் ஸ்பின் சுமாராக வீசக்கூடியவராக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது ஐபிஎல் அணியில் இடம் பெற்று இருக்கும் சுனில் நரைனை நகலெடுத்து அவரைப் போலவே தற்பொழுது முயற்சி செய்தது வருவது ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் இதற்கு பின்னால் கம்பீர் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Shreyas Iyer bowling with Sunil Narine action 😭😭 pic.twitter.com/Ah0omGDxgE
— Yash Godara #ICT (@105of70Mumbai) August 27, 2024