ஐசிசி தலைவர் ஆகிட்டேன்.. கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்யாமல் விடமாட்டேன் – ஜெய் ஷா பேட்டி

0
72
ICC

ஐசிசி தலைவர் கிரேக் பார்லே பதவிக்கால முடிவுக்கு பின், ஐசிசி உறுப்பினர்களின் ஒருமித்த முடிவால் புதிய ஐசிசி தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக இருந்த ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் உலக கிரிக்கெட்டுக்கு மகிழ்ச்சி அளிக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஐசிசி அமைப்புக்கு மிக இளவயதில் தலைவரானவர் என்ற பெருமை ஜெய் ஷாவுக்கு கிடைத்திருக்கிறது. மேலும் இந்தப் பதவியில் அமரும் ஐந்தாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பாகவே ஸ்ரீனிவாசன், சரத்குமார் போன்றவர்கள் இந்த பதவியில் இருந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஐசிசி தலைவர் ஜெய் ஷா அறிக்கை

ஜெய் ஷா தன்னுடைய அறிக்கையில் கூறும் பொழுது ” உலகம் முழுவதும் எங்கள் விளையாட்டின் தரத்தை உயர்த்த என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். இந்த முக்கிய பாத்திரத்தில் நான் அடி எடுத்து வைக்கும் பொழுது, உங்களின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும், அழகான கிரிக்கெட் விளையாட்டிற்கு என்னை அர்ப்பணிப்பதற்கும் நான் உறுதியாக இருக்கிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்ப்போம்

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகமாக இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், நாம் புதிதாக உருமாறும் சகாப்தத்தின் உச்சியில் இருக்கிறோம். இது ஒரு கவுரவம் மட்டும் கிடையாது, இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ள நம் எல்லோருக்கும் ஒரு தெளிவான அழைப்பு. எங்களுக்கு பகிரப்பட்ட இந்த பயணத்தில், இப்படி ஒரு அற்புதமான காலகட்டத்தில் ஐசிசியை தலைவராக வழிநடத்துவது என்னுடைய பாக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க : கனா படம் முதல் டி20 உலக கோப்பை இந்திய அணி வரை.. யார் இந்த சஜனா.?.. ஏழ்மையால் கடந்து வந்த கடினமான பாதை

டி20 கிரிக்கெட் இயற்கையாவே பரபரப்பானது. அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுப்பது சமமான முக்கியத்துவம் கொண்டது. கிரிக்கெட்டின் அடித்தளமாக டெஸ்ட் கிரிக்கெட் இருக்கின்ற காரணத்தினால், அதை நோக்கி வீரர்கள் உந்தப்படுவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும் எங்களுடைய இலக்குகள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அதை வளர்ப்பதை நோக்கி இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் க்கு தரமான வீரர்களை உருவாக்குவதின் மூலமாகவே, பொதுவான கிரிக்கெட்டுக்கு தரமான வீரர்களை எல்லா நாடுகளிலும் உருவாக்க முடியும். தற்பொழுது இதை புதிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா உணர்ந்து அறிவித்திருப்பது உலக கிரிக்கெட் நாடுகளை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -