இன்று பையத் முஸ்டாக் அலி தொடரில் வாழ்வா சாவா போட்டியில் மும்பை அணி ஹரியானா அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேற முடியாத சூழ்நிலை மும்பை அணிக்கு இருந்தது. எனவே மும்பையின் நட்சத்திர பேட்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி இருந்தது.
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹரியானா அணிக்கு அர்ஸ் ரங்கா 23 பந்தில் 26 ரன், கேப்டன் அன்கீத் குமார் 42 பந்தில் 89 ரன், நிஷாந்த் சிந்து ஆட்டம் இழக்காமல் 38 பந்தில் 63 ரன்கள், சர்மன் ஜகார் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள்.
ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. நாக் அவுட் போன்ற முக்கியமான போட்டியில் மும்பை அணிக்கு இது பெரிய நெருக்கடியை உருவாக்கியது. எனவே மேல் வரிசையில் இருந்து பெரிய ரன்கள் வரவேண்டியது கட்டாயமானது.
இதற்கடுத்து விளையாடிய மும்பை அணிக்கு ரகானே 10 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 48 பந்தில் சதம் அடித்து 50 பந்தில் 101 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய சர்பராஸ் கான் வெறும் 25 பந்தில் 64 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணி 17.3 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இந்தியா மாதிரி நாங்களும் மாற்றங்களை செய்யறோம்.. ஆனா அது மாற்றம் இல்ல இதுதான் – தெஆ கோச் பேச்சு
இந்திய டி20 அணியில் தொடர்ந்து ஜெய்ஸ்வாலுக்கு இடம் தராமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கில்லுக்கு இவருடைய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஜெய்ஸ்வால் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலமாக கம்பீர் மற்றும் அகர்கருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.