இந்தியா மாதிரி நாங்களும் மாற்றங்களை செய்யறோம்.. ஆனா அது மாற்றம் இல்ல இதுதான் – தெஆ கோச் பேச்சு

0
46
Conrad

தற்போது தென் ஆப்பிரிக்கா டி20 அணியில் நிறைய மாற்றங்கள் போட்டிக்கு போட்டி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து தென் ஆப்ரிக்க தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணி சில ஆண்டுகளுக்கு முன்னால் நட்சத்திர வீரர்கள் அனைவரும் கூண்டோடு ஓய்வு பெற்ற காரணத்தினால் தடுமாற ஆரம்பித்தது. தற்பொழுது அந்த சரிவில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக செயல்பட ஆரம்பித்து இருக்கிறது. டெஸ்ட் உலக சாம்பியன் ஆகவும் இருக்கிறது.

- Advertisement -

வளரும் தன் ஆப்பிரிக்க அணி

தற்போது பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை சமன் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் தொடரை வென்றது. மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளை பார்க்கும்போது நல்ல ஆல்ரவுண்டர்களை உள்ளே கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா விரும்பினால் பேட்டிங் வரிசையை 9 வரையில் நீட்டித்துக் கொள்ள முடியும்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக 358 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து ஒட்டுமொத்த அணியாக செயல்படுவதில் தென் ஆப்பிரிக்கா மீண்டும் தங்களுடைய குணத்தை காட்டி இருக்கிறது. அதே சமயத்தில் தற்பொழுது நிறைய மாற்றங்களை ஒவ்வொரு போட்டியிலும் செய்கிறது.

- Advertisement -

இதுதான் முக்கிய காரணம்

இதற்கான காரணம் குறித்து பேசி உள்ள சுக்ரி கான்ராட் கூறும் பொழுது ” ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் செய்யும் அதிகமான மாற்றங்களை பார்க்கும் பொழுது நாங்கள் நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பது போல தோன்றும். ஆனால் உண்மையில் இந்த மாற்றங்கள் எல்லாம் மாற்றங்கள் கிடையாது. இதன் அடிப்படையில் நாங்கள் எதிர்காலத்தில் விளையாடப் போவதும் இல்லை”

இதையும் படிங்க: கம்பீர் இத பண்ணுவாருன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்.. நான் ஆல்ரெடி அதுக்கு தயார் – திலக் வர்மா பேட்டி

” எங்களுடைய டி20 உலகக் கோப்பை அணி எப்படி இருக்கும் என எங்களுக்கு ஒரு ஐடியா இருக்கிறது. எனவே நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் மாற்றங்கள் வீரர்களின் பணி சுமையை நிர்வகிப்பதற்காகவே. மற்றபடி நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இப்பொழுது நிறைய விளையாடி வருகிறோம். மேலும் எங்களுக்கு சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடர் இருக்கிறது. எனவே வீரர்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -