52 வருட சாதனையை உடைத்து.. சர்பராஸ் கான் இரட்டை சதம்.. ருதுராஜ் அணிக்கு நெருக்கடி.. 2024 இரானி கோப்பை

0
496
Sarfraz

தற்போது இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான இரானி கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வீரர் சர்பராஸ் கான் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து 52 வருட மும்பை சாதனையை உடைத்திருக்கிறார்.

வருடம் தோறும் ரஞ்சி சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா அணி மோதும் டெஸ்ட் கோப்பையான இரானி கோப்பை தொடர் நடைபெறும். இந்த வருடம் ரஞ்சி சாம்பியன் ரகானே தலைமையிலான மும்பை அணிக்கு எதிராக ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி விளையாடுகிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் ரகானே கூட்டணி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ருதுராஜ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி பிரிதிவிஷா உட்பட 3 விக்கெட்டுகளை முதலிலேயே இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து 170 பந்தில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் 84 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து ரகானே மற்றும் சர்பராஸ் கான் இருவரும் நேற்று முதல் நாளில் ஜோடி சேர்ந்தார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி நேற்று ஆட்ட நாள் முடிவில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு இருவருமே அரை சதமும் அடித்தார்கள். மும்பை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்த பொழுது வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

- Advertisement -

சர்பராஸ் கான் சாதனை இரட்டை சதம்

இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு ரகானே துரதிஷ்டவசமாக 234 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார். ஆனால் ஒரு முனையில் நின்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 253 பந்துகளில் 23 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இதையும் படிங்க : சரித்திர வெற்றிக்கு காரணம்.. அதிரடி பேட்டிங் மட்டுமில்ல.. ரோகித் செய்த இதுவும்தான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

இராணி கோப்பை வரலாற்றில் சப்ராஸ் கானுக்கு முன்பாக மும்பை வீரர் ராம்நாத் பார்கர் 1972 ஆம் ஆண்டு ஆட்டம் 194 ரன்கள் எடுத்தது மும்பை வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்து வந்தது. தற்பொழுது 52 வருட இந்த சாதனையை முறியடித்து சர்ப்ராஸ் கான் இரட்டை சாதனை படைத்து அசத்தியிருக்கிறார். மேலும் அடுத்தடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களுக்கு இந்திய அணியில் தன்னுடைய இடத்தையும் உறுதி செய்து இருக்கிறார் என்று கூறலாம்.

- Advertisement -