இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இரண்டாவது போட்டியில் இரண்டு நாட்கள் ஆட்டம் தடைபட்ட போதிலும் அதிரடியாக செயல்பட்டு இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் வரலாற்று வெற்றியை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானில் வைத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அந்த வெற்றி கொடுத்த மிகப்பெரிய நம்பிக்கையில் இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் தோல்வி பெற்று இரண்டாவது போட்டியில் களமிறங்கியது.
அதற்குப் பிறகு கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் வீசப்பட்ட பிறகு மழையின் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. மேலும் அடுத்த இரண்டு நாட்களிலும் பெய்த தொடர் மழையின் காரணமாக முற்றிலுமாக ஆட்டம் தடைபட்ட நிலையில் மீதமுள்ள இரண்டு நாட்களை பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது “இந்தத் தொடர் இரண்டாவதாக நினைவிற்கு வருவதற்கு காரணம் இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றியாகும். பாகிஸ்தான் அணியை தோற்கடித்திருந்தாலும் வங்கதேசத்தை வீழ்த்துவது பெரிய விஷயம் இல்லை என்று கூறலாம். இந்திய அணியை வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, மற்ற எந்த அணியாலும் செய்ய முடியாததை உங்களால் எப்படி செய்ய முடியும்.
முதலில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாணி மாறியது. டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்து வீசத் தீர்மானிக்க, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடும் ஆடுகளத்தில் ரோகித் சர்மாவின் இந்திய அணி விளையாடியது. அதாவது நீங்கள் உங்களை சவால் செய்ய முயற்சித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். முதல் நாளில் வெறும் 35 ஓவர்கள் ஆட்டம், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. இது 100 சதவீதம் ட்ரா என்று சொல்லப்பட்டது.
இதையும் படிங்க:பதிரனாவை தூக்கிய சூப்பர் கிங்ஸ்.. சிஎஸ்கேவில் உறுதியாகிறதா 11 கோடி அக்ரிமெண்ட்? – வெளியான தகவல்கள்
ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 40 ஓவர்கள் மீதும் இருக்கும்போது இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இரண்டு நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டது. அதையும் மீறி வெற்றி பெறுவது என்பது ஒரு சரித்திரம். இது ஒன்றன்பின் ஒன்றாக படைக்கப்பட்ட சாதனை வெற்றியாகும். வெற்றியை எதிர்பார்க்காத போது பெறப்படும் வெற்றி என்பது ஒரு மைல்கல்” என்று கூறியிருக்கிறார்.