மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 33வது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் மும்பை மோதல்
மும்பை அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை மும்பை ஃபீல்டர்கள் வீணடிக்க, இறுதியாக அவர் 27 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரியுடன் 40 ரன்கள் குவித்து வெளியேறினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் 29 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பின்னர் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் பந்துகளை வீணடிக்க, அதிரடி ஆட்டக்காரர் கிளாசன் 28 பந்துகளை எதிர் கொண்டு 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 37 ரன்கள் குவித்து பும்ராவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது.
ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் அசத்தல்
இதற்குப் பின்னர் வெற்றியிலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. இந்த முறை தொடக்க வீரர் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 16 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் குவித்த நிலையில், கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் 31 ரன்கள் எடுத்து வெளியேற, வில்ஜாக்ஸ் மற்றும் சூரியகுமார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஏற்கனவே பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய வில் ஜாக்ஸ் 26 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆல் ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:6, 4, 4, 6.. 18வது ஓவரில் கியரை மாற்றிய கிளாசன்.. முதல் பந்தில் ஸ்டம்பை காலி செய்து பும்ரா படைத்த ஸ்பெஷல் சாதனை.. ஐபிஎல் 2025
சூரியகுமார் யாதவ் 26 ரன்னில் வெளியேற, ஹர்த்திக் பாண்டியா இறுதிக்கட்டத்தில் 9 பந்துகளில் 21 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய முன்னாள் ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்