இன்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் நிகழ்வில் இந்த போட்டி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முடிவை மாற்றி எடுத்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த அணியில் அஸ்வனி குமார் இடத்திற்கு ரகு சர்மா என்ற இளம் லெக் ஸ்பின்னர் அறிமுகமாகிறார்.
சிஎஸ்கே அணியில் மாற்றம்
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்று ஆகிவிட்டது. இதன் காரணமாக சிஎஸ்கே தங்கள் அணியில் இடம் பெற்று இருக்கும் அன் கேப்ட் இந்திய வீரர்களின் திறமையை பரிசோதிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ணா கோஸ் மற்றும் 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இடதுகை ஸ்பின்னர் பிரசாந்த் வீர் இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
ருதுராஜ் கருத்து
இந்த போட்டி குறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும்பொழுது “நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இந்த ஆடுகளம் நன்றாக மற்றும் கொஞ்சம் உலர்ந்து இருக்கிறது. கடந்த போட்டியில் எங்களுக்கு கொஞ்சம் கடினமான ஆடுகளமாக இருந்தது. தற்போது எங்கள் வீரர்கள் நல்ல தன்னம்பிக்கையில் இருக்கிறார்கள். நாங்கள் செயல் முறையில் சரியாக பின்பற்றினால் வெற்றிகள் தானாக வரும். இரண்டு இளம் வீரர்கள் அணிக்குள் வருகிறார்கள்”
இதையும் படிங்க : 15 வயசு பையனுக்கு இப்படி பயப்படுவேனு நினைக்கவே இல்லை.. ஆனா ஸ்டார்க் வந்ததும் தைரியம் வந்துருச்சு – ஜெமிசன் பேச்சு
மேலும் இந்த போட்டியில் தங்களுடைய பேட்ஸ்மேன் களுக்கு ரன் அடிக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.






