15 வயசு பையனுக்கு இப்படி பயப்படுவேனு நினைக்கவே இல்லை.. ஆனா ஸ்டார்க் வந்ததும் தைரியம் வந்துருச்சு – ஜெமிசன் பேச்சு

0
11
Jamieson

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ஜேமிசன் வைபவ் சூர்யவன்சி விக்கெட்டை ஆரம்பத்திலேயே கைப்பற்றினார். தற்போது இது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 15 வயதான வைபவ் சூரியவன்சியை பார்த்து எல்லா அணிகளுமே பயப்படுகின்றன. அவரை எப்படியாவது சீக்கிரத்தில் ஆட்டம் இழக்க வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்கின்றன. அவர் முப்பது பந்துகள் சந்தித்தாலே ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுகிறார்.

- Advertisement -

இப்படி பயப்பட்டதில்லை

இந்த நிலையில் நேற்று ஜேமிசன் ஒரு இன் ஸ்விங் யார்க்கர் மூலமாக வைபவ் சூரியவன்சி விக்கெட்டை துவக்கத்திலேயே கைப்பற்றினார். பிறகு அவர் அந்த சிறுவனை பார்த்து மிகவும் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் மைதானத்திற்கு வெளியே டெல்லி வீரர்கள் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இது அந்த சிறுவன் எவ்வளவு பெரிய ஆள் என்பதை காட்டியது.

இதுகுறித்து ஜேமிசன் பேசும்போது “என் வாழ்க்கையில் ஒரு 15 வயது சிறுவனை பார்த்து நான் இந்த அளவுக்கு பயந்ததில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் போட்டிக்கு முன்பாகவே அவருக்கு சில திட்டங்கள் உருவாக்கி இருந்தோம். அது பலன் அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

- Advertisement -

ஸ்டார்க் துணை

“ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள். இதில் ஒரு ஹை ஃபுல்டாஸ் மூலம் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றி விட்டார். நான் யார்க்கர் மூலம் சூரியவன்சி விக்கெட்டை கைப்பற்றி விட்டேன். எனவே அவர்களை ஆரம்பத்திலேயே நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம்”

இதையும் படிங்க : ஸ்ட்ரைக் ரேட் முக்கியமானது நான் புரிஞ்சுகிட்டேன்.. நிஷாங்கா கிட்ட சொல்லி வச்சு செஞ்சோம் – கேஎல் ராகுல் பேட்டி

“ஸ்டார்க் மிகவும் உலகத்தரம் வாய்ந்தவர். அப்படிப்பட்டவர் உங்களுடன் இருப்பது மிகவும் நன்மையான விஷயம். நாங்கள் புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகள் எடுத்து முன்னேற வேண்டிய அவசியம் இருந்தது. இந்த முக்கியமான நேரத்தில் அவர் வந்தார். அவருடன் புதிய பந்தை பகிர்ந்து கொண்டு வீசுவது மிகவும் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -