கிளாசனை தூக்கி போட்டியை திருப்பிய பும்ரா.. ஐபிஎல் வரலாற்றில் 3வது ஃபாஸ்ட் பவுலராக அபார சாதனை.. ஐபிஎல் 2025

0
251

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான ஜஸ்பிரித் பும்ரா முக்கியமான நேரத்தில் ஹென்றிச் கிளாசினை வீழ்த்தி சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் மும்பை மோதல்

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் துவங்கியது. இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தீபக்சகர் மற்றும் போல்ட் வெளியேற்ற, இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்த சன் ரைசர்ஸ் அணியை விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் மற்றும் இம்பாக்ட் பிளேயர் அபினவ் மனோகர் ஆகியோர் சரிவில் விழுந்த அணியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் அபினவ் மனோகர் கிளாசனுக்கு கம்பெனி கொடுக்க, தனி ஆளாக கிளாஸன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சினை வெளுத்து வாங்கினார். 44 பந்துகளை எதிர்கொண்டு 9 போர் மற்றும் 2 சிக்ஸர் என 71 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவரை பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெளியேற்றினார்.

- Advertisement -

பும்ரா படைத்த சிறப்பான சாதனை

இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் பும்ரா வீழ்த்திய 300வது விக்கெட்டாக இது அமைந்தது. இது ஒட்டு மொத்த டி20 வரலாற்றில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் யுஸ்வேந்திர சஹால் 373 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், பியூஸ் சாவ்லா 319 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், புவனேஸ்வர் குமார் 318 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 317 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. சன்ரைசர்ஸ் டாப் 4 பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய மோசமான சாதனை.. MI vs SRH

இந்தப் பட்டியலில் ஐந்தாவது வீரராக பும்ரா இருக்கிறார். 300 விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் இரண்டாவது இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் மூன்றாவது சர்வதேச வேக பந்துவீச்சாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது பந்துவீச்சு சராசரி மற்றவர்களை விட 6.91 சராசரியில் சிறப்பான நிலையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் பேட் செய்து உள்ள சன் ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -