18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. சன்ரைசர்ஸ் டாப் 4 பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய மோசமான சாதனை.. MI vs SRH

0
167

18 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் மும்பை மோதல்

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் தங்கள் அணி பந்து வீசும் என்று அறிவித்தார். சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றமாக ஜெயதேவ் உனத்காட் வாய்ப்பு பெற்று இருக்கிறார். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியில் அஸ்வனி குமாருக்கு பதிலாக விக்னேஷ் புத்தூர் இடம் பெற்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணி முதலில் தங்கள் இன்னிங்சை துவக்கியது.

சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி துவக்கட்டக்காரர் டிராவீஸ் ஹெட் தான் சந்தித்த நான்காவது பந்திலேயே போல்ட் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த துயரம் மீள்வதற்குள் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் இசான் கிசான் 1 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் வந்த நிதீஷ் குமார் ரெட்டி 2 ரன்னில் தீபக்சகார்பந்து வீச்சில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 8 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

டாப் 4 பேட்ஸ்மேன்கள் மோசமான சாதனை

சன்ரைசர்ஸ் அணிக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பே இல்லாமல் இப்படி விளையாடிவிட்டு வெளியேறியது அந்த அணிக்கு பெரிய சிக்கலை தற்போது உண்டாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு அணியுமே நிகழ்த்தாத ஒரு சோகமான வரலாற்றை சன்ரைசர்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது. அதாவது சன்ரைசர்ஸ் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் வினோத அவுட்.. இஷானின் மோசமான நடவடிக்கை.. அம்பயரை வாங்கிட்டீங்களா?.. ரசிகர்கள் கடுமையான விமர்சனம்

இதற்கு முன்னர் எந்த ஒரு அணியுமே தங்களது சொந்த மண்ணில் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் இப்படி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விளையாடி வரும் சன் ரைசர்ஸ் அணி சற்று முன்பு வரை 11.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இன்னும் ஒன்பது ஓவர்கள் இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சவாலான ரன்களை நிர்ணயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது அந்த அணியின் வர்மா மற்றும் கிளாசன் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -