மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றின் போது வெளியேறும் மூன்று வெளிநாட்டு வீரர்களுக்கு அட்டகாசமான மூன்று புதிய வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்து அசத்தியிருக்கிறது.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அந்த அணி தனக்கிருக்கும் இரண்டு போட்டிகளையும் வென்றாக வேண்டிய ஒரு நெருக்கடியில் இருக்கிறது.
மும்பை பிளே ஆப்ஸ் வாய்ப்பு
தற்போது மும்பை அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைந்து பஞ்சாப் அணியை மட்டும் வென்றால், அடுத்து பஞ்சாப் அணியிடம் டெல்லி தோல்வி அடைவதற்காக காத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரியான் ரிக்கல்டன், வில் ஜேக்ஸ் மற்றும் கார்பின் போஸ் என மூன்று முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுகிறார்கள். இதன் காரணமாக அந்த அணி கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் மூவருமே பிளேயிங் லெவனில் இடம் பெறக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அசத்திய மும்பை இந்தியன்ஸ்
தற்போது ரியான் ரிக்கல்ட்டன் இடத்திற்கு இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, ஆப் ஸ்பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் இடத்திற்கு அவரை போன்ற இலங்கையின் கேப்டன் சரித் அசலங்கா, மேலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கார்பின் போஸ் இடத்திற்கு முழுமையான வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் கிளேஷன் என மூன்று சிறப்பான வீரர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதையும் படிங்க : கேப்டன் பதவி இல்லை.. கேஎல் ராகுலுக்கு அடித்த வேற அதிர்ஷ்டம்.. பிசிசிஐ எதிர்பாராத பரிசு – வெளியான தகவல்கள்
இதன் காரணமாக மூன்று முக்கிய வீரர்கள் வெளியேறிய பொழுதிலும் மும்பை இந்தியன்ஸ் சரியான வீரர்களை கண்டுபிடித்து விட்டதால், அந்த அணி மீண்டும் வலிமையை அடைந்திருக்கிறது. இதன் காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியை வென்று விட்டால் மும்பை இந்தியன்ஸ் உள்ளே வந்து கோப்பையை வென்று விடும் என்ற பயம் மீண்டும் மற்ற அணிகளுக்கு ஏற்பட்டிருப்பது உண்மை!