கேப்டன் பதவி இல்லை.. கேஎல் ராகுலுக்கு அடித்த வேற அதிர்ஷ்டம்.. பிசிசிஐ எதிர்பாராத பரிசு – வெளியான தகவல்கள்

0
624
Rahul

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் கேஎல்.ராகுலுக்கு பிசிசிஐ ஒரு சிறப்பு பரிசு கொடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான நகர்வாக அமையலாம்.

இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடி வரும் கேஎல்.ராகுல் ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் ஆரம்பித்து தற்போது துவக்க ஆட்டக்காரராக விளையாடிய சதம் அடித்து அசத்தியிருக்கிறார். மேலும் அவர் 11 போட்டியில் 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 493 ரன்கள் குவித்தும் இருக்கிறார்.

- Advertisement -

ராகுல் நான்காண்டு சோகம்

கேஎல்.ராகுல் இறுதியாக இந்திய டி20 அணியில் இடம் பிடித்து நான்கு ஆண்டுகளுக்கு பக்கம் ஆகப்போகிறது. இறுதியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடியதுதான் கடைசி சர்வதேச டி20 போட்டியாக அவருக்கு அமைந்தது.

அந்த தொடரில் ஆறு போட்டியில் 120.75 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 128 ரன்கள் மட்டுமே கே.எல்.ராகுல் எடுத்திருந்தார். இதன் காரணமாக இந்திய டி20 கிரிக்கெட்டை மறு சீரமைப்பதற்காக உடனடியாக அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். ஏறக்குறைய அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்பட்டது.

- Advertisement -

பிசிசிஐ கொடுக்கும் பரிசு

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிப்ரவரி மாதத்தில் நிறைய போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பங்களாதேஷ் செல்கிறது. இந்தத் தொடர் டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை இறுதி செய்வதற்கு முக்கியமான தொடராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வருங்கால கேப்டன் கில்லை விட.. தமிழ்நாட்டு சாய் சுதர்சன் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. காரணம் இதான் – அஜய் ஜடேஜா கருத்து

இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கிறது. தற்போது ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் கேஎல்.ராகுல் எல்லா இடங்களிலும் விளையாடுவதால், மேலும் முக்கியமாக அவர் விக்கெட் இப்ப ஆகவும் இருப்பதால், பிசிசிஐ இன்னொரு வாய்ப்பைக் கொடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் இரண்டாவது விக்கெட் கீழ்ப்பருக்கான இடத்தில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. அனேகமாக ரிஷப் பண்ட் இந்தியா டி20 அணியில் இருந்து நீக்கப்படலாம்!

- Advertisement -