“மும்பை இந்தியன்ஸ் ரோகித்துக்கு செஞ்சத.. எந்த டீமும் செய்யாது!” – மோர்கன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

0
981
Rohit

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் வருவதற்கு முன்பாகவே, ஐபிஎல் குறித்து களத்தை மிகவும் பரபரப்பாக்கும் நிகழ்வாக ஐபிஎல் ஏலம் எப்பொழுதும் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு இன்று ஐபிஎல் ஏலம் நடக்கும் முன்பாகவே, ஐபிஎல் களம் மிகவும் பரபரப்பாகிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் களத்தை பரபரப்பு ஆக்கியது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனை ஒரு பக்கமாக மட்டும் பணம் கொடுத்து தங்கள் அணிக்கு வாங்கியதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பரபரப்பை பற்ற வைத்தது.

இதற்கு அடுத்து அதிரடியாக அணிக்குள் கொண்டுவரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து, வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்த்தியது.

இந்த இரண்டாவது நிகழ்வு ஒட்டுமொத்த ஐபிஎல் களத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெளியே இருக்கும் பொதுவான வேறு அணி ரசிகர்கள் கூட கடுமையான விமர்சனங்களை இது குறித்து முன் வைத்தார்கள்.

- Advertisement -

மேலும் பல மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்வதில் இருந்து வெளியேறி தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் இயான் மோர்கன் கூறும்பொழுது “நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை பார்த்தால் எப்பொழுதும் அவர்கள் முன்னோக்கி சிந்திக்க கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எது சரியோ அதை நோக்கி மட்டுமே நகரக்கூடிய பாணியை கொண்டவர்கள்.

நீண்ட காலத்திற்கான பயன் என்கின்ற அடிப்படையில், அடுத்த வருடம் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை உயர்த்த வேண்டும் என்கின்ற தொலைநோக்கில், இந்த கடினமான முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள். இந்த முடிவை ஒரு வகையில் அவர்களின் தைரியத்திற்காக நாம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் வேறு எந்த அணிகளும் இப்படி ஒரு தைரியமான முடிவை எடுக்கவே எடுக்காது!” என்று கூறியிருக்கிறார்!