ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி மற்றும் நான்கு போட்டிகளில் தோல்வி என புள்ளி பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயராக வருவதற்கான காரணத்தை மும்பை கோச் மகேலா ஜெயவர்த்தனே கூறி இருக்கிறார்.
இம்பாக்ட் பிளேயராக ரோஹித் சர்மா
18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அணியும் அட்டவணையின் அடிப்படையில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி கடந்தா சில சீசனங்களில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கத்தில் சில போட்டிகளில் தடுமாறினாலும் அதற்குப் பிறகு அற்புதமாக விளையாடி மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் அவர் போட்டிகளின் போது இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கி விளையாடுவது ரசிகர்களிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக ஃபீல்டிங் செய்ய விரும்பும் ரோகித் சர்மா இந்த முறையை மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கில் கடைசி சில ஓவர்களில் பீல்டிங் செய்ய வருகிறார்.
மகிலா ஜெயவர்தனே விளக்கம்
அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கி விளையாடி வரும் நிலையில் அதற்கான காரணம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான மகேலா ஜெயவர்த்தனே பேசி இருக்கிறார். அதாவது அவர் சமூக வலைதளத்தில் இட்ட பதிவில் “அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தசைப்பிடிப்பு பிரச்சனை சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாகத்தான் அவர் இம்பாக்ட் வீரராக வருகிறார்” என பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:என் மகன் ஆயுஸ் மத்ரே சூரியவன்சி மாதிரி ஆடக்கூடாது.. தோனி அவன்கிட்ட சொன்னது வேற – தந்தை பேட்டி
இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா கடந்த 10 போட்டிகளில் 155.03 ஸ்டிரைக் ரேட்டில் 293 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் வலுவான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் இந்த இரண்டு அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.






