இளம் பவுலருக்கு வாய்ப்பு கொடுக்க முக்கிய காரணமே இதுதான்.. அந்த 2 விஷயம் அபாரமா செஞ்சாரு – கேப்டன் பாண்டியா புகழாரம்

0
219

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 12வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணி வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா அணி மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. மும்பை அணியின் அறிமுக வீரர் அஸ்வினி குமார் முதல் போட்டியிலேயே தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கட்டுகள் கைப்பற்றினார். கொல்கத்தா அணியை பொறுத்தவரை ரகுவன்சி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 13 ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்ட்டன் அபாரமாக விளையாடி மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 41 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்கள் குவித்த தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இந்த சூழ்நிலையில் தொடர் தோல்வி அடைந்த மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்த வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் போது “வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் ஒரு குழுவாக அனைவரும் ஒத்துழைத்த விதம் பார்க்கும்போது இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சியிருக்கிறது. எங்கள் அணியில் ஒரு வீரரை தேர்ந்தெடுப்பது என்பது இங்கும் அங்கும் மிகவும் சவாலானது. எங்கள் அணியில் நாங்கள் ஆதரிக்கும் வீரர்களை பொறுத்தவரை நிலைமை மிகவும் சீராகவே இருக்கும்.

இதையும் படிங்க:43 பந்துகள் மீதம்.. மும்பை இந்தியன்ஸ் அபார சேசிங்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. அறிமுக வீரரால் சரிந்த கேகேஆர்.. ஐபிஎல் 2025

இந்த ஆடுகளத்தை பொறுத்தவரை அஸ்வினி குமார் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நினைத்தோம். முதலில் இதன் அடிப்படை அனைத்துமே மும்பை ஸ்கவுட்களால் ஆனது தான். மும்பை தேர்வு குழு அனைத்து இடங்களுக்கும் சென்று இளம் குழந்தைகளை தேர்ந்தெடுக்கின்றனர். நாங்கள் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது அஸ்வினி குமார் லேட் ஸ்விங் மற்றும் அற்புதமான லைன் மற்றும் லென்த்தை கொண்டிருந்தார். வித்தியாசமான ஆக்சன் மற்றும் ஒரு இடது பவுலராக இருந்தார். குறிப்பாக அவர் ரசலின் விக்கெட்டை எடுத்த விதம் மற்றும் டீ காக்கை அவர் கேட்ச் பிடித்து வெளியேற்றிய விதம் இரண்டுமே அற்புதமாக இருந்தது. ஒரு வேகப்பந்துவீச்சாளர் இவ்வளவு உயரத்திற்கு தாவுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. எனவே ஒரு குழுவாக நாங்கள் செயல்பட்டதில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -