ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
மும்பை கொல்கத்தா மோதல்
மும்பை வான்கடெ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிக்காக் ஒரு ரன்னில் தீபக் சகார் பந்துவீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் தனது இரண்டாவது பந்தில் போல்ட் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆரம்பமே பிரச்சனையாக இருந்த நிலையில் அதற்குப் பிறகு மிடில் வரிசையை மும்பை அணிக்கு அறிமுக வீரராக களம் இறங்கிய அஸ்வினி குமார் தனது சிறந்த பந்துவீச்சால் கொல்கத்தா அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தினார். இதில் கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே 11 ரன், ரிங்கு சிங் 17 ரன், மனிஷ் பாண்டே 19 ரன் ரசல் 5 ரன்னில் வெளியேற்றினார். கொல்கத்தா அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்டர் அன்கிரிஷ் ரகுவன்சி 26 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தவரை அறிமுகவீரர் அஸ்வினி குமார் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
முதல் வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ்
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை அணிக்கு இம்பாக்ட் பிளேயர் ரோஹித் சர்மா 12 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மூன்றாவது வரிசையில் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 17 பந்துகளில் 16 ரன் எடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க:தெளிவா சொல்றேன்.. அவரை இனி டீம்ல எடுக்காதீங்க.. ஓவரா அசைச்சா எப்படி ஓடுவாரு – ஹர்பஜன் சிங் பேட்டி
சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 41 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதில் 4 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் சூரியகுமார் யாதவ் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 27 ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 121ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






